‘சார்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- விமல், சாயா தேவி, சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெயபாலன், விஜய் முருகன், சரவண சக்தி, பிரானா, எலிசபெத், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- போஸ் வெங்கட்.

ஒளிப்பதிவாளர் :- இனியன் ஜே ஹரிஷ்.

படத்தொகுப்பாளர் :- ஸ்ரீஜித் சாரங்.

இசையமைப்பாளர் :- சித்து குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- சிராஜ் எஸ், நிலோஃபர் சிராஜ்.

ரேட்டிங் :- 4./5.

மாணவ மாணவிகள் பயிலும் கல்வியை தடுப்பது யாராக இருந்தாலும் சரி அது கடவுளாக இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை கூறும் திரைப்படம்தான் இந்த ‘சார்’.

1960 – 1980களில் மாங்கொல்லை என்ற அந்த ஊரில் உயர்சாதியை சேர்ந்த ஊர் தலைவர் மற்றும் சாமியாடியாக உள்ள ஜெயபாலன், அந்த ஊரில் உள்ள ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வியறிவு பெற்று முன்னேறி விடக்கூடாது என்பதில் மிகவும் பிடிவாதமாக வாழ்ந்து வருகிறார்.

ஊர் தலைவர் மற்றும் சாமியாடியாக இருக்கும் ஜெயபாலன், தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு பெற்றுவிடக்கூடாது என்பதுடன் அவருடைய சாதிப்பெருமையும் சேர்ந்து கொள்ள கடவுள் பக்தியை அந்த ஊர் உள்ள மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்.

மாங்கொல்லை என்ற அந்த ஊரில் அண்ணாதுரை வாத்தியார் மூலம் கட்டிக் கொடுத்த பள்ளிக்கூடத்தை இடித்து விட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார் ஊர் தலைவர் ஊசாமியாடியாக இருக்கும் ஜெயபாலன்.

ஊர் தலைவர் மற்றும் சாமியாடியாக இருக்கும் ஜெயபாலனை எதிர்த்து மாங்கொல்லை என்ற அந்த ஊருக்கு வரும் அண்ணாதுரை வாத்தியார் அந்த ஊர் மக்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தை கட்டிக் கொடுத்து கல்வியறிவை ஊர் மக்களுக்கு போதிக்கிறார்.

அண்ணாதுரை வாத்தியார் இந்த மாங்கொல்லை என்ற ஊரில் ஆரம்பித்த ஆரம்பப்பள்ளியை அவருடைய மகன் சரவணன் நடுநிலைப் பள்ளியாக மாற்றுகிறார்.

கதாநாயகன் விமலின் தந்தை சரவணன் ஆரம்பித்த அந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்க வேண்டும் என அந்த ஊர் மக்களை கல்வியறிவில் மேம்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

காலம் மாறி தலைமுறைகள் கடந்தாலும் சாதியும் கடவுள் நம்பிக்கை என்ற பெயரிலும் மூடநம்பிக்கையும் அந்த ஊர் மக்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவே அமைகிறது.

இதையெல்லாம் எதிர்த்து அந்த ஊர் மக்கள் எப்படி முன்னேறுகிறார்கள்? ஊர் மக்கள் முன்னேறினார்களா?, முன்னேறவில்லையா?, என்பதுதான் இந்த ‘சார்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சார்’ திரைப்படத்தில், விமல் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் சிவஞானம் என்ற வாத்தியார் கதாபாத்திரத்தில் மிக அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

இந்த ‘சார்’ திரைப்படத்தில் கதாநாயகியாக சாயாதேவி நடித்திருக்கிறார்.

கதாநாயகி சாயாதேவி ஆசிரியை கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் விமல் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவணன், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமா, ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயபாலன் மற்றும் பலர் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரிஷ் ஒளிப்பதிவு மூலம் மிகவும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

கல்வி பெற்றால் ஒரு சமூகம் முன்னேறும் என்ற விஷயத்திற்கு சாதி பெருமையும், கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் எப்படி தடையாக இருக்கிறது என்பதையே திரைப்படத்தில் சொல்ல வருகிறார்கள்.

இங்கு தாழ்த்தப்பட்டவங்க  ஒடுக்கப்பட்டவங்க மேல வராம இருக்க நீங்க முதல்ல கை வைக்கற இடம் கல்விதானே?’, ’பள்ளிக் கூடத்தை அழிச்சிட்டா கல்வியை அழிக்க முடியும்னு நினைக்கறீங்களா?’ இது போன்ற வசனங்கள் அருமையாக உள்ளது.

மொத்தத்தில் இந்த ’சார்’ திரைப்படம் எடுத்துக் கொண்ட கதையை மிகவும் வலுவாக சொல்லி பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார்கள்.

error: Content is protected !!