“மார்கன்” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, ராமச்சந்திரன், பிரிஜிடா, தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி,வினோத் சாகர், நடராஜ், அருண் ராகவ், கதிர், ராஜாராம் அபிஷேக், நிஹாரிகா,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- லியோ ஜான் பால்.
ஒளிப்பதிவாளர் :- எஸ்.யுவா.
படத்தொகுப்பாளர் :- லியோ ஜான் பால்.
இசையமைப்பாளர் :- விஜய் ஆண்டனி.
தயாரிப்பு நிறுவனம் :- விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்.
தயாரிப்பாளர் :- பாத்திமா விஜய் ஆண்டனி.
ரேட்டிங்:- 2.75/5.
கதாநாயகன் விஜய் ஆண்டனி மும்பையில் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார்.
சென்னையில் இளம்பெண் ஒருவர் தன் பிறந்தநாள் விழாவை கொண்டாடி விட்டு தனது காதலனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து தனது வீடு இருக்கும் தெருவில் இறங்கி நடந்து செல்கிறார்.
நள்ளிரவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை ஒரு மர்ம நபர் ஒருவர் கொலை செய்து விடுகிறார்
இந்த இளம்பெண் இறந்த செய்தியை அறிந்த கதாநாயகன் விஜய் ஆண்டனி, மர்மமான முறையில் இறந்த அந்த பெண்ணின் கொலை வழக்கை பற்றி விசாரிக்க மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார்.
மேலும் அந்த மர்மமான முறையில் வந்த அந்த இளம் பெண்ணின் கொலை வழக்கை கதாநாயகன் விஜய் ஆண்டனி கையில் எடுக்கிறார்.
அந்த இளம் பெண்ணின் கொலை வழக்கை பற்றிய விசாரணையில் எந்த ஆதாரமும் கிடைக்காமல் கதாநாயகன் விஜய் ஆண்டனி தவித்துக் கொண்டிருக்கிறார்.
இறுதியில் கதாநாயகன் விஜய் ஆண்டனி, அந்த இளம் பெண்ணை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? அந்த மர்ம நபர் யார்? எதற்காக இளம்பெண்ளை மட்டும் கொலை செய்கிறார் என்பதுதான் இந்த “மார்கன்” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “மார்கன்” திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார்.
இந்த “மார்கன்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வசன உச்சரிப்பு உடை நடை அனைத்தும் கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்துள்ளார்.
அந்த சைக்கோ வில்லனை தேடி அலையும் காட்சிகளில் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.
தன்னுடைய மகள் இறந்த காட்சியில் தமிழ் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நெகிழ வைத்து இருக்கிறார்.
இந்த கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் தீஷன், நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
கதாநாயகன் விஜய் ஆண்டனியுடன் பயணிக்கும் பிரகிடா, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகிடா மிக அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி,வினோத் சாகர், நடராஜ், அருண் ராகவ், கதிர், ராஜாராம் அபிஷேக், நிஹாரிகா, இவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு மூலம் அனைத்தும் கலர்ஃபுல்லாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
திரைப்படத்தின் தொடக்கத்தில் மிகவும் விறுவிறுப்பாக தொடங்கிய திரைக்கதை போக போக ஆமை வேகம் பேல் குறைந்துவிட்டது.
இந்த சைக்கோ கொலையாளி யார் என்பதை கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்து இருப்பது திரைப்படத்திற்கு சிறப்பாக அமைந்திருக்கிறது.
முதல் பாதியில் உள்ள நீளம் போல் இரண்டாம் பாதியில் திரைப்படத்தில் நீளத்தை குறைத்து இருந்தால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கூடுதலாக ரசித்து இருப்பார்கள்.
கிரைம் திரில்லர் கதையை கையில் எடுத்து வித்தியாசமான திரைக்கதையை அமைத்து வழக்கமான திரில்லர் என்றாலும் திரைக்கதையில் மிகப்பெரிய அளவில் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் லியோ ஜான் பால்.
மொத்தத்தில் “மார்கன்” கிரைம் திரில்லர் திரைப்படம் ரசிக்கலாம்.











