’லைன்மேன்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், சார்லி, அதிதி பாலன், விநாயகர் ராஜ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எம்.உதயகுமார்.

ஒளிப்பதிவாளர் :- விஷ்ணு கே ராஜா.

படத்தொகுப்பாளர் :- ஆர் ஆர் சிவராஜ்.

இசையமைப்பாளர் :- தீபக் நந்தகுமார்.

தயாரிப்பு நிறுவனம் :- மெட்ராஸ் ஸ்டோர்ஸ்.

தயாரிப்பாளர் :- வினோத் சேகர், தினகர் பாபு.

ரேட்டிங்:- 3.25./5.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் என்ற கிராமத்தில் உப்பளம் ஏரியாவில் இருக்கும் மின் வாரியத்தில் லைன்மேனாக பணிபுரிந்து வரும் சார்லியின் மகன் கதாநாயகன் ஜெகன் பாலாஜி மின் பொறியியல் படிப்பை முடித்து விட்டு தனது கண்டுபிடிப்புகளால் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவ நினைக்கிறார்.

மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பின்பு விளக்குகள் அனைத்தும் ஆன் ஆவது போலவும் காலையில் சூரியன் வந்தவுடன் ஆஃப் ஆகு மாதிரி தானியங்கி கருவி ஒன்றை கதாநாயகன் ஜெகன் பாலாஜி உருவாக்குகிறார்.

தானியங்கி கருவிகான அங்கீகாரம் பெறுவதற்காக முயற்சிக்கும் கதாநாயகன் ஜெகன் பாலாஜி செல்லும் அனைத்து இடங்களிலும் தோல்வி மட்டுமே கிடைக்க, துவண்டு போய்விடாமல் தொடர்ந்து அங்கீகாரம் கிடைக்கும் வரை போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அந்த உப்பளம் ஏரியாவில் உள்ள முதலாளி விநாயகர் ராஜ் மூலமாக அவரது கண்டுபிடிக்கு தனியாங்கி கருவி அங்கீகாரத்திற்கான கிடைக்காமல் இருப்பதற்கு பல வழிகளில் சில சதி வேலைகள் நடக்க, அந்த சதி வேலைகளில் இருந்து மீண்டு வந்து அவர் முயற்சியில் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த லைன் மேன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த லைன் மேன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக புதுமுக நடிகர் ஜெகன் பாலாஜி நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி புதிய முகம் என்றாலும், தனது நடிப்பின் மூலம் உண்மை சம்பவத்தின் வலியை தனது நடிப்பின் மூலம் மிக நேர்த்தியாக நடிப்பின் மூலம் வாழ்ந்திருக்கிறார்.

கதையின் நாயகன் ஜெகன் பாலாஜியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி, தனது அனுபவமான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலனின் வருகை திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

இந்த லைன் மேன் திரைப்படத்தில் கதாநாயகியாக சரண்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், உப்பளத்தில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்களை போலவே வாழ்ந்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மண்ணின் மைந்தர்களாக வலம் வந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு கே ராஜாவின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்திலும் மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தீபக் நந்தகுமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த லைன் மேன் திரைப்படம் ஒரு எளிய மனிதர் தனது புதிய கருவி கண்டு பிடிப்புக்கான  அங்கீகாரத்தை பெறுவதற்கு எத்தகைய இன்னல்களை எதிர்கொள்கிறார் என்பதையும், உப்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் முதலாளியின் அடக்கு முறையால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதையும் சிறு முயற்சியாக சொல்லியிருந்தாலும், அதை மிக சிறப்பாகவே இயக்கியிருக்கிறார் இயக்குனர் எம்.உதயகுமார்.

மொத்தத்தில், ‘லைன்மேன்’ திரைப்படம் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வர போராடும்  அரசாங்கத்தால் அங்கீகாரம் கிடைக்காத ஒரு விஞ்ஞானியின் கதை.