இதுவரை வெளியான திரைப்படங்களை காட்டிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் உச்சம் தொட்டிருக்கிறது !
இதுவரை வெளியான
திரைப்படங்களை காட்டிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் உச்சம் தொட்டிருக்கிறது !
சென்னை 10 ஆகஸ்ட் 2025 முதல்முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்துள்ள இந்த கூலி திரைப்படத்தில் இந்திய திரை உலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
குறிப்பாக பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
இதனாலையே கூலி திரைப்படத்திற்கான ஹைப் அதிகரித்து உள்ளது..
தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்தவுடன் இரண்டு மணி நேரத்தில் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் களியாகிவிட்டது..
ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற இடங்களிலும் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.
பொதுவாகவே ஓவர்சீஸ் பிசினஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பெரிய அளவு ஒர்க் அவுட் ஆகாது.
ஆனால் இந்தக் கூலி திரைப்படத்திற்கு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் கூலி பிசினஸ் பட்டையை கிளப்பி இருக்கிறது.
கூலி திரைப்படத்தால் பயத்தில் இருக்கும் நடிகர்கள்.
அதுமட்டுமல்லாமல் கூலி திரைப்படத்துடன் பாலிவுட் திரைப்படமான வார் 2 திரைப்படம் வெளியாகிறது.
அந்த திரைப்படத்தைக் காட்டிலும் கூலி திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து உள்ளதால் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த விஸ்வரூப வளர்ச்சியை பார்த்து பெரிய தலைகளை பயந்து போய் உள்ளனர்.
அதாவது பாலிவுட்டிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மார்க்கெட் இப்போது கூலி திரைப்படத்தால் அதிகரித்ததால் அமிதாபச்சன், ஷாருக்கான் போன்ற நடிகர்களே தங்களது மார்க்கெட்டுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்துடன் பதட்டத்தில் இருக்கிறார்கள்.
தெலுங்கு தயாரிப்பாளர்களும் கலக்கத்தில் உள்ளார்களாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்திற்கு இவ்வாறு ஒரு எதிர்பார்ப்பு இருப்பதே மதில் மேல் இருக்கும் பூனை போல தான் அதுவும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் அதிகப்படியான எதிர்பார்ப்பு சில சமயங்களில் பெரிய ஏமாற்றத்தை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
கூலி திரைப்படம் அதில் விதிவிலக்காக இருக்கிறதா என்பது ஆகஸ்ட் 14ஆம் தேதி தெரியவரும்.











