சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் குஷியில் பதம் குமார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் குஷியில் பதம் குமார்!
சென்னை 18 ஆகஸ்ட் 2023 ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சபதம் குமார் இந்தியில் பல திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் போடா போடி திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
இவர் பாவக் கதைகள் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது.
அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டினார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிக்கப்பட்டது.
இதன் மூலம் இவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக வெள்ளித்திரையில் நடித்துள்ள தனது முதல் படமே ரஜினி படமாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள இவர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து லிரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.









