’தி ராஜா சாப்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், வி டிவி கணேஷ், ரித்தி குமார்,  சஞ்சய் தத் , ஜரீனா வஹாப், போமன் இரானி , சமுத்திரக்கனி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மாருதி.

ஒளிப்பதிவாளர் :- கார்த்திக் பழனி.

படத்தொகுப்பாளர் :- கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்.

இசையமைப்பாளர் :- எஸ்.தமன்.

தயாரிப்பு நிறுவனங்கள் :- பீப்பிள் மீடியா பேக்டரி, ஐவி என்டேர்டைன்மெண்ட்.

தயாரிப்பாளர்கள் :- டி.ஜி. விஷ்வ பிரசாத், கிருத்தி பிரசாத்.

ரேட்டிங் :-  2.5./5.

பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ், ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ மூலம் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.

தொடர்ச்சியாக ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது தன் நடிக்கும் ஜானரை மாற்றியுள்ளார்.

ஒரு நல்ல காமெடி என்டர்டெய்னர் செய்ய வேண்டும் என் தற்போது ‘தி ராஜாசாப்’ திரைப்படத்தை தேர்வு செய்துள்ளார்.

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் ஆக்சன் திரைப்படங்களில் கவர்ந்தாலும், அவர் ஒரு திகில் திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பதால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

சிறு வயது முதலே தாய் தந்தையை இழந்து தனது பாட்டியின் வளர்ப்பில் கதாநாயகன் பிரபாஸ் வளர்ந்து வருகிறார்.

தனது பாட்டி மீது கதாநாயகன் பிரபாஸ் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராய் வாழ்ந்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் ரித்தி குமார் ஆதரவளிக்கிறாள்.

கதாநாயகன் பிரபாவின் தாதா சஞ்சய் தத் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது தாத்தாவை கண்டுபிடிப்பதற்காக தேடி செல்லும் கதாநாயகன் பிரபாஸ், பல்வேறு மாய வித்தைகளை கற்று தேர்ந்த பயங்கரமான மந்திரவாதியாக சஞ்சய் தத், தான் தனது தாத்தா என கதாநாயகன் பிரபாஸ்  தெரிந்துக் கொள்கிறார்.

தனது தாத்தா சஞ்சய் தத் தேடி சென்ற இடத்தில் கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் கதாநாயகி நிதி அகர்வால், கண்டதும் கதாநாயகன் பிரபாஸ் காதல் கொள்கிறார்.

மாய வித்தைகளை கற்று தேர்ந்த பயங்கரமான மந்திரவாதியாக சஞ்சய் தத், மாறியது என் எதற்காக? 

கதாநாயகி நிதி அகர்வாலை காதலிக்கும் கதாநாயகன் பிரபாஸ் இருவரும் காதலி ஒன்று சேர்ந்தார்களா? ஒன்று சேரவில்லையா?

தனது தாத்தாவை தேடி சென்ற கதாநாயகன் பிரகாஷ் தனது தாத்தாவை கண்டுபிடித்தாரா?, கண்டுபிடிக்கவில்லையா?,  என்பதுதான் இந்த ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘தி ராஜா சாப்’  திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் பிரபாஸ் கதாபாத்திரத்தை  சுமாராக செய்திருக்கிறார்.
 
இந்த திரைப்படத்தின் நடித்தது அவருடைய கேரியரில் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கிறார்.

இந்த தி ராஜா சாப் திரைப்படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகிகள் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், ஒருவருக்கு கூட அழுத்தமான கதாபாத்திரம் இல்லை என்பதுதான் உண்மை.

மூன்று கதாநாயகிகளையும் திரைப்படத்திற்கு பாடல் காட்சி வேண்டும் என்பதற்காக செட் பிராப்பர்ட்டியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கதாநாயகன் பிரபாஸ் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத் மற்றும் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரினா வாகப் இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

பொம்மன் இரானியும் சிறிய கதாபாத்திரத்தில் வந்து போகிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைவருமே ஒரு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு மூலம் திரைப்பட ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் பின்னணி இசையின் சத்தம் காதை கிழிக்கும் வகையில் உள்ளது.

காதல், காமெடி, கவர்ச்சி, திகில், கற்பனை என்று கமர்ஷியல் திரைப்படங்களுக்கு தேவையான அனைத்து விசயங்களும் திரைப்படத்தில் இருந்தாலும், எதுவுமே ரசிக்கும்படி இல்லாதது திரைப்படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், ‘தி ராஜா சாப்’ திரைப்படம் சுமார்.

error: Content is protected !!