‘சாரா’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விஜய் விஷ்வா, சாக்ஷி அகர்வால், பொன்வண்ணன், தங்கதுரை, ரோபோ சங்கர், யோகி பாபு, அஸ்மிதா, அம்பிகா, மிரட்டல் செல்வா, செல்லக்குட்டி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- செல்லக்குட்டி.
<span;>ஒளிப்பதிவாளர் :- <span;>லக்ஷ்மன் குமார் எம்.எஃப்.ஐ .
படத்தொகுப்பாளர் :- ஜான் ஆபிரகாம்.
இசையமைப்பாளர் :- கார்த்திக் ராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- விஷ்வா ட்ரீம் வேர்ல்ட்.
தயாரிப்பாளர்:- ஸ்ரீபட்டவன்.
ரேட்டிங் :- 1.5./5.
கதாநாயகி சாக்ஷி அகர்வால் மற்றும் தந்தை பொன்வண்ணன் மற்றும் தாய் தம்பி குடும்பத்தினர் தங்களது குலதெய்வ கருப்பன் கோயில் சென்ற வில்லன் மிரட்டல் செல்வா, அனைவரையும் கொலை செய்து விடுகிறார்.
இது அனைத்தும் கதாநாயகி சாக்ஷி அகர்வால் கனவில் நடக்கிறது.
கதாநாயகி சாக்ஷி அகர்வால், ஒரு தனியார் அடுக்குமாடி கட்டுமான நிறுவனத்தில் தலைமை பொறியாளர் பணியாற்றி வருகிறார்
அதே அடுக்குமாடி கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கதாநாயகன் விஜய் விஸ்வாவை இன்னும் சில தினங்களில் கதாநாயகி சாக்ஷி அகர்வால் திருமணம் நடக்கவிருக்கிறது.
கதாநாயகி சாக்ஷி அகர்வால் மற்றும் கதாநாயகன் விஜய் விஷ்வா திருமணத்திற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் திருமண தடங்கல்கள் அடிக்கடி விழுந்து கொண்டிருக்க வீட்டில் உள்ள அனைவரும் மன சங்கடங்கள் ஏற்படுகிறது.
வேலை பார்க்கும் கட்டுமான நிறுவனத்தில் மணல் முறைகேடு நடந்து வர கதாநாயகி சாக்ஷி அகர்வால் அதை தட்டிக் கேட்க மிரட்டல் செல்வா, சாக்ஷி அகர்வாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க அதே கட்டுமான நிறுவனத்தில் வாட்ச் மேனாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ரோபோ சங்கரிடம் வில்லன் மிரட்டல் செல்வா கதாநாயகி சாக்ஷி அகர்வாலை கொலை செய்ய சொல்கிறார்
அதே கட்டுமான நிறுவனத்தில் யோகிபாபு, தங்கதுரை மற்றும் செல்லக் குட்டி வேலை பார்த்து வருகிறார்கள்.
கதாநாயகி சாக்ஷி அகர்வால் மற்றும் செல்லக்குட்டி இருவரும் பள்ளியில் படிக்கும் காலங்களில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
கதாநாயகி சாக்ஷி அகர்வால் மற்றும் செல்லக்குட்டி இருவரும் பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ள, கதாநாயகி சாக்ஷி அகர்வாலுக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருப்பது தெரியாமலேயே கதாநாயகி சாக்ஷி அகர்வாலை செல்லக்குட்டி திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்
இந்நிலையில் கதாநாயகி சாக்ஷி அகர்வாலை செல்லக்குட்டி கடத்துவதற்கு முயற்சி செய்கிறார்.
கதாநாயகி சாக்ஷி அகர்வாலை செல்ல குட்டி கடத்தினாரா? கடத்த வில்லையா?
கதாநாயகன் விஜய் விஷ்வா கதாநாயகி சாக்ஷி அகர்வால் திருமணம் நடந்ததா? நடக்கவில்லையா? என்பதுதான் இந்த “சாரா” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த சாரா திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் விஷ்வா நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் விஷ்வாவிற்கு பெரிதாக நடிப்பதற்கு வேலை இல்லை.
யோகி பாபு ரோபோ சங்கர் மற்றும் தங்கதுரையின் காமெடி சரவெடியாய் வெடித்தது திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் செல்லக்குட்டி, பெரிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்லக்குட்டி நடிக்காமல் இருந்திருந்தால் இந்த திரைப்படம் மிகவும் அருமையாக இருந்திருக்கும்.
க்ளைமாக்ஸ் காட்சியில் ஓவராக நடித்து இந்த திரைப்படத்தை கெடுத்து இருக்கிறார்.
இந்த சாரா திரைப்படத்தில் கதாநாயகியாக சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால் அழகாக வந்து தனது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
பொன்வண்ணன், அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
<span;>ஒளிப்பதிவாளர் ஜெ. <span;>லக்ஷ்மன் குமார் எம்.எஃப்.ஐ . ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
நல்ல கதையை கையில் எடுத்திருந்த இயக்குனர் செல்லக்குட்டி, அந்தக் கதையை அருமையாக திரைக்கதை அமைத்து சிறப்பான காட்சிகளை அமைக்க இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இந்தத் திரைப்படம் அருமையான திரைப்படமாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் “சாரா” சுமாரான திரைப்படம்.











