’ராஜா வீட்டு கன்னுக்குட்டி’ திரைப்பட விமர்சனம்

நடிகர் நடிகைகள்:- ஆதிக் சிலம்பரசன், தம்பி சிவன், காயத்ரி ரெமா, அனு கிருஷ்ணா, வர்ஷிதா, விஜய் டிவி சரத், மனோகர், பெருமத்தா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஏ.பி ராஜீவ்.

ஒளிப்பதிவாளர் :- ஹரிகாந்த்.

படத்தொகுப்பாளர் :-

இசையமைப்பாளர் :- டைசன் ராஜ்.

தயாரிப்பு நிறுவனம் :- நேத்ராலயா பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- ஸ்ரீ ஆர்.ஆர் மூவிஸ், நகரத்தார் டாக்டர்.ராஜா (எ) ராமநாதன்.

ரேட்டிங் :-2./5.

குடும்பத்துடன் வெளிநாட்டு செட்டிலாகி மிகப்பெரிய பணக்காரன் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகன் ஆதிக் சிலம்பரசன் தனது சொந்த கிராமத்துக்கு வருகிறார்.

தன்னுடைய கிராமத்திற்கு வந்த கதாநாயகன் ஆதிக் சிலம்பரசன் தன்னுடைய உயிர் நண்பன் தம்பி சிவன் வந்து சந்திக்கிறார்.

கதாநாயகன் ஆதிக் சிலம்பரசன் முன்னாள் காதலி கதாநாயகி காயத்ரி ரெமா,வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிட்ட, கவலையில் இருக்கும் கதாநாயகன் ஆதிக் சிலம்பரசனை மீட்பதற்காக உயிர் நண்பன் தம்பி சிவனின் தங்கை வர்ஷிதா திருமணம் செய்து வைக்கிறார். 

கதாநாயகன் ஆதிக் சிலம்பரசன் மற்றும் உயிர் நண்பன் தம்பி சிவனின் தங்கை வர்ஷிதா வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் நண்பன் தம்பி சிவன் தங்கையும் விரும்பியதால் அந்தத் திருமணம் இருவருக்கும் நடந்து, வர்ஷிதாவின் வயிற்றில் கதாநாயகன் ஆதிக் சிலம்பரசனின் குழந்தையை சுமக்கிறார்.

தன்னுடைய நண்பன் தம்பி சிவன் மூலமாக முன்னாள் காதலி கதாநாயகி காயத்ரி ரெமாவின் குழந்தை இறந்து விட்டதாக கூறுகிறார்.

கதாநாயகன் ஆதிக் சிலம்பரசனிடம் நண்பன் தம்பி சிவன் இறந்தது உன்னுடைய குழந்தைதான் என நண்பன் தம்பி சிவன் மூலம் தெரியவர இருவர் பேசுவதை கதாநாயகன் ஆதிக் சிலம்பரசன் மனைவி வர்ஷிதா கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

முன்னாள் காதலி கதாநாயகி காயத்ரி ரெமாவை பற்றிய ஒரு உண்மை கதாநாயகன் ஆதிக் சிலம்பரசனுக்குத் தெரிய வருகிறது. 

அதன் பிறகு முன்னாள் காதலி கதாநாயகி காயத்ரி ரெமாவை கதாநாயகன் ஆதிக் சிலம்பரசன் சந்தித்தாரா? சந்திக்கவில்லையா?

கதாநாயகன் ஆதிக் சிலம்பரசன் மனைவி வர்ஷிதா முன்னாள் காதலியை பற்றி தெரிந்த உண்மையை எப்படி சமாளித்தார் என்பதுதான் இந்த ராஜா வீட்டு கன்னுக்குட்டி மீதிக் கதை.

இந்த ராஜா வீட்டு கன்னுக்குட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுக நடிகர் ஆதிக் சிலம்பரசன், நடித்திருக்கிறார்.
 
கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஆதிக் சிலம்பரசன், கிராமத்து இளைஞர்கள் போலவே முகம் கபடி போட்டி மற்றும் சண்டைக்காட்சிகளில் காதல் காட்சிகளிலும், காதல் மூலம் தனக்கு ஏற்பட்ட வலியை மனதளவில் வெளிப்படுத்தும் காட்சிகளிலும் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி சிவன், இரண்டாவது கதாநாயகனாக திரைப்படம் முழுவதும் வரும் தம்பி சிவன் நண்பனின் மனம் அறிந்து, அவர் செய்யும் அனைத்து விசயங்களும் நடிப்பு மூலம் பார்வையாளர்கள் மனதில் அந்த கதாபாத்திரத்தை பதிய வைத்து விடுகிறார்

இந்த ராஜா வீட்டு கன்னுக்குட்டி திரைப்படத்தில் கதாநாயகிகளாக காயத்ரி ரெமா, வர்ஷிதா, அனு கிருஷ்ணா என முவர் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் ஆதிக் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, வர்ஷிதா இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் ஆதிக் சிலம்பரசனுக்கு கதாநாயகிகளாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, வர்ஷிதா மற்றும் கதாநாயகன் நண்பர் தம்பி சிவனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அனு கிருஷ்ணா என மூவரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கதாநாயகன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் டிவி சரத் மற்றும் அவரது நண்பர்கள் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மனோகர் மற்றும் பெருமத்தா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அனைவரும் தங்களது பணியை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஹரிகாந்த், ஒளிப்பதிவு மூலம் கிராமத்து மனிதர்களையும், எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு,  மட்டுமல்லாமல் பாடல் காட்சிகளை கலர்புல்லாக திரைப்படமாக்கி இருக்கிறார்.

தளபதி டைசன் ராஜ் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை அளவாக பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

காதல் கதையை ஜாலியாகவும், சோகமாகவும் உண்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் காதலிக்கும் கதாநாயகன், நடிகர் ஆதிக் சிலம்பரசன், இறுதியில் அந்த காதலால் எப்படி நிலைகுலைந்து போகிறார், என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.பி.ராஜீவ்,

மொத்தத்தில், ‘ராஜா வீட்டு கன்னுக்குட்டி’ இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.

error: Content is protected !!