’ஹரி ஹர வீரமல்லு’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஸ்ரீ பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி டியோல், நாசர், சத்யராஜ், ஈஸ்வரி ராவ், ரகு பாபு, தனிகெல்ல பரணி, முரளி ஷர்மா, சுனில், சுப்பராஜு, ஐயப்ப சர்மா வெண்ணைல கிஷோர், சச்சின் கேடேகர், பம்மி சாய், ஆதித்யா மேனன், அனசூயா, பூஜிதா பொன்னாடா, கபீர் துவான் சிங், நிஹார் கபூர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஏ.எம். ஜோதி கிருஷ்ணா, க்ரிஷ் ஜாகர்லமுடி.
ஒளிப்பதிவாளர்கள் :- ஞான சேகர் VS, மனோஜ் பரமஹம்சா.
படத்தொகுப்பாளர் :- பிரவீன் கே.எல்.
இசையமைப்பாளர் :- எம்.எம். கீரவாணி.
தயாரிப்பு நிறுவனம் :- மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ஏ எம் ரத்னம்,
ஏ. தயாகர் ராவ்.
ரேட்டிங் :- 3./5.
தெலுங்கு திரைப்பட உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஹரி ஹரா வீர மல்லு.
1600 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அடிமையாக்கப்பட்ட ஒரு சமூகத்தில் சேர்ந்த, குழந்தை ஒன்று ஆற்றில் அடித்துச் சென்று கொண்டிருக்கும் அந்த குழந்தையை சத்யராஜ் மற்றும் ஈஸ்வரி ராவ் தம்பதியினர் காப்பாற்றுகிறார்கள்.
இந்து மதத்தின் கடவுள் பற்றியும்
பெருமையையும் வரலாறையும் சொல்லித்தரும் குருகுலத்தை சத்யராஜ் நடத்தி வருகிறார்.
வைரங்கள் வைடூரியங்கள் செல்வங்கள் அனைத்தும் இருப்பவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வீரராக கதாநாயகன் பவன் கல்யாண், முகலாய மன்னர் பாபி தியோல் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரத்தை எப்படியாவது திருடியாக வேண்டும் என டெல்லிக்கு பயணப்படுகிறார்.
முகலாய மன்னர் பாபி தியோல் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரத்தை கதாநாயகன் பவன் கல்யாண் திருடினாரா? திருடவில்லையா? என்பதுதான் இந்த ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தில் கதை நாயகனாக பவன் கல்யாண் நடித்திருக்கிறார்.ன
ஹரி ஹர வீரமல்லு என்ற வீரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவன் கல்யாண், திரைப்படம் முழுவதும் மாஸாக நடித்திருக்கிறார்.
இந்துக்களின் பெருமை பேசுவது, ஏழை மக்களுக்கு உதவுவது, இஸ்லாமிய மக்களுடன் நட்பை பாராட்டுவது என்று முழுக்க முழுக்க மிகவும் அருமையாக பயணித்திருப்பவர்,
இந்த ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வாலுக்கு பெரிய அளவில் திரைப்படத்தில் வேலை இல்லை.
திரைப்படத்திற்கு கதாநாயகிக்கு தேவை என்பதால் நிதி அகர்வால் கதாநாயகியாக திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
முகலாய மன்னர் அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாபி தியோல் கதாபாத்திரத்திற்கு மிக சிறப்பான நடிப்பை கொடுத்து மிரட்டியிருக்கிறார்.
முகலாய மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பவர், தனது கண்கள் மூலமாகவே இந்துக்கள் மீதான தன்னுடைய இனவெறியை வெளிக்காட்டி கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, ஈஸ்வரி ராவ், விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேகர், ரகு பாபு, சுனில், கபிர் பெடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அனுபவம் வாய்ந்த நடிகர்களை தேர்வு செய்து அந்தந்த கதாபாத்திரத்திற்கு நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ஞானசேகர் வி.எஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் இசையில் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் பின்னணி இசையின் மூலம் திரைப்படத்தின் மாஸான காட்சிகளுக்கே மாஸ் காண்பித்துள்ளார்.
வரலாற்று கதையோடு தனது கற்பனை கதையையும் சேர்த்து, பிரமாண்டமான ஆக்ஷன் மற்றும் சாகசங்கள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா
மொத்தத்தில், ‘ஹரி ஹர வீரமல்லு’ புராண கதையாக இல்லாமல் நார்மல் கதையாக எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.











