முதல் நாள் வசூலில் பட்டைய கிளப்பும் ‘பராசக்தி’ !!
முதல் நாள் வசூலில் பட்டைய கிளப்பும் ‘பராசக்தி’ !!
சென்னை 11 ஜனவரி 2026 இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பராசக்தி”.
இந்த “பராசக்தி” திரைப்படத்தில் அதர்வா, ஜெயம்ரவி, தேவ் இராம்நாத், பிருத்திவி ராஜ், குரு சோமசுந்தரம், ரஞ்சன் ராமநாயக்கா, ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த “பராசக்தி” திரைப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
கௌரவ தோற்றத்தில் தெலுங்கு நடிகர் ராணா ரகுபதி,, மலையாள நடிகர் பாசில் ஜோசப் மற்றும் கன்னட நடிகர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் வெளிவந்த சந்தோஷத்தில் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பராசக்தி’ திரைப்படத்தை பார்க்க திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், மற்றும் மற்ற நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
இதற்கு முன்னதாக ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு தணிக்க குழுவினரால் தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி இந்த ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜனவரி 10ஆம் தேதி அன்று ‘பராசக்தி’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
இந்த ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினரால் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது.
இந்நிலையில், பராசக்தி திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் உலகமெங்கும் ரூபாய் .27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
https://x.com/i/status/2010306975595462897











