என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு’ போன்ற வசனங்கள் இன்று வெளியான “பராசக்தி”  டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன !!

என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு’ போன்ற வசனங்கள் இன்று வெளியான “பராசக்தி”  டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன !!

சென்னை 04 ஜனவரி 2026 இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பராசக்தி”.

இந்த “பராசக்தி” திரைப்படத்தில் அதர்வா, ஜெயம்ரவி, தேவ் இராம்நாத், பிருத்திவி ராசன், குரு சோமசுந்தரம்,  பேசில் ஜோசப், ரஞ்சன் ராமநாயக்கா, ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த “பராசக்தி” திரைப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மொழி பிரச்சனை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த “பராசக்தி” திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன’ திரைப்படத்திற்கு போட்டியாக ஜனவரி 10ஆம் தேதி அன்று உலகமெங்கும் உள்ள  திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் சாய் ராம்  கல்லூரியில், திரைப்படக்குழுவினர் கலந்து கொள்ள, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

டிரெய்லரில், டெல்லிதான் இந்தியாவா?, எங்களுக்கு இந்தி திணிப்புதான் எதிரியே தவிர, இந்தி மொழியோ, அதைப்பேசும் மக்களோ கிடையாது, ‘

என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

https://youtu.be/dXCliyBQnWU?si=tScWQNrbNkWakn49

error: Content is protected !!