முத்து என்கிற காட்டான்’ இனையத்தொடர் விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா, ஜெமினி மணி, பாலாஜி சக்திவேல், சிந்து,, இர்ஷாத் அலி, அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன் ஆர். அமரேந்திரன்,  சாதனா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எம்  மணிகண்டன்  பி. அஜித்குமார்.

ஒளிப்பதிவாளர் :- என்  சண்முகசுந்தரம், மது நீலகண்டன் 

படத்தொகுப்பாளர் :- பி.அஜித் குமார்.

இசையமைப்பாளர் :- ராஜேஷ் முருகேசன்.

தயாரிப்பு நிறுவனம் :- விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- விஜய் சேதுபதி.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

ரேட்டிங் :-  3.75./5.

திரைக்கு வந்த ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் எம்.மணிகண்டன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள இணையத்தொடர், ‘முத்து என்கிற காட்டான்’.

டார்க் திரில்லர் ஜானர் திரைப்பட ரசிகர்களை இந்த  ‘முத்து என்கிற காட்டான்’.  இணையத்தொடர், கண்டிப்பாக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் படைப்பாக ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர் 27 மார்ச் 2026 ஆம் தேதி அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

அந்த கிராமத்தில்  உள்ள காவல் நிலையத்தில் சில வருடங்களாக எந்தவொரு புகாரும் வராததால், நிரந்தரமாக மூடப்படும் தருவாயில் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு திடீரென ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர்பெறுகிறது

ஒரு மனிதனின் முண்டம்  வேறு தலை வேறாக வெட்டப்பட்ட தலை மட்டுமே காவல்துறை அதிகாரிகள் கைகளில்  கிடைக்கிறது.

ஒரு மனிதனின் முண்டம்  வேறு தலை வேறாக வெட்டப்பட்டது எதற்காக வெட்டப்பட்டவரின் பெயர் முத்து என காவல்துறையினருக்கு தெரிய வருகிறது.

வெட்டப்பட்ட முத்து என்பவர் யார்? அவரை எதற்காக கொடூரமான முறையில்  கொன்றது யார்?

வெட்டப்பட்ட முத்து என்பவரின் தலை மட்டுமே கிடைத்த நிலையில் முண்டத்தை தேடி அலையும் காவல்துறையினர் கையில் முண்டம் கிடைத்ததா?, முண்டம்  கிடைக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரின் மீதிக்கதை.

இந்த ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரில் கதையின் நாயகனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி முத்து கதாபாத்திரத்தில்  தனது வழக்கமான டிரேட் மார்க் நடிப்பை மிகச் சிறப்பாக வழங்கியுள்ளார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி முத்து கதாபாத்திரத்தில் பல்வேறு தொழில்களில்  ஈடுபடும் பிளாஷ்பேக் காட்சிகள், இந்த இனையத்தொடரை ரசிகர்களை உடனடியாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை அதிகரிக்கிறது.

மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேக்கப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், விஜே பார்வதி, அபி நட்சத்திரா ஆகியோர், அந்தந்த கதாபாத்திரங்களுக்கு இயல்பாக பொருந்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள்  என். சண்முகசுந்தரம், மது நீலகண்டன் இருவரின் ஒளிப்பதிவு மூலம் கிராமத்து காட்சிகளை  யதார்த்தமாக காட்சிப்படுத்தி சிறப்பான ஒளிப்பதிவை செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையில் பின்னணி இசை இணையத் தொடர்க்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறது.

சமீப காலமாக தமிழ் திரைப்பட உலகில் இணையத் தொடர்களுக்கு ஒடிடி  ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் படைப்பாக “முத்து என்கிற காட்டான்” ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் வருவதால் இது ஓடிடி ரசிகர்களிடையே பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

திகில், மர்மம் மற்றும் உணர்ச்சி கலந்து உருவாகியுள்ள இந்த தொடரின் முழுக் கதை என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

மேலும், சமீப காலங்களில் ஓடிடி தளங்களில் வெளியாகும் தமிழ்ப் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அதேபோல் “முத்து என்கிற காட்டான்” தொடரும் சர்வதேச அளவில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், இந்த ‘முத்து என்கிற காட்டான்’ ஊட்டி டி ரசிகர்களை கவர்வான்.

error: Content is protected !!