“பறந்து போ” திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல்,  தேஜாஸ்வினி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராம்.

ஒளிப்பதிவாளர் :- என்.கே. ஏகாம்பரம்.

படத்தொகுப்பாளர் :- மதி வி.எஸ்.

இசையமைப்பாளர் :-  சந்தோஷ் தயாநிதி.

தயாரிப்பு நிறுவனம் :- ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ்,

தயாரிப்பாளர்கள் :- ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர்.

ரேட்டிங் :- 4./5.

தனக்குக் கிடைக்காத அனைத்தும் தன்னுடைய குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள்.

தாய் தந்தை செல்லாத உயரத்திற்கு  தங்களது குழந்தைகள் செல்ல வேண்டும்.என ஆசைப்படும் தாய் தந்தையினர், தங்களுடைய குழந்தைகளின் விருப்பங்கள் என்னவென்று தெரிந்து கொள்வதில்லை.

அப்படிப்பட்ட தந்தை  கதாநாயகன் மிர்ச்சி சிவா, அவருடைய மனைவி கதாநாயகி கிரேஸ் ஆண்டனி, தங்களது மகனை உயர்ந்த பள்ளியில் படிக்க வைப்பது, அவர் கேட்பதை கேட்கும்போது எல்லாம் வாங்கி கொடுப்பது, அவர் எது செய்தாலும் பாராட்டுவது என்று இருந்தாலும், அவர் உண்மையாகவே எதிர்பார்ப்பது என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இருசக்கர வாகனத்தில் கதாநாயகன் கதாநாயகன் மிர்ச்சி சிவா, தன்னுடைய மகனுடன் நீண்ட தூரம் பயணிக்கிறார்.

கதாநாயகன் மிர்ச்சி சிவா, தன் மகனின் மனதில் உள்ள உண்மையான விருப்பம் என்ன தனது மகன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என நினைக்கும் வாழ்க்கையைப் பற்றி கதாநாயகன் மிர்ச்சி சிவா எப்படி தெரிந்துக் கொள்கிறார், என்பதுதான் இந்த ‘பறந்து போ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் பறந்து போ திரைப்படத்தில் கதையின் நாயகனாக மிர்ச்சி சிவா, நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா, கோகுல் என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறுவனுக்கு தந்தையாக  நடித்திருக்கிறார்.

கதையின் நாயகன் மிர்ச்சி சிவா, எபோதும் போல தன்னை அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பதோடு, மட்டுமல்லாமல் தன்னுடைய டைமிங் வசனங்கள் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்கவும் வைக்கிறார்.

கதையின் நாயகன் மிர்ச்சி சிவாவின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மித்துல் ரியான், வயதுக்கு ஏற்ற குறும்புத்தனத்தால் ரசிக்க வைத்திருக்கிறான்.

தந்தை கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மித்துல் ரியான், இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

இந்த பறந்து போ திரைப்படத்தின்
கதையின் நாயகியாக கிரேஸ் ஆண்டனி நடித்திருக்கிறார்.

கதையின் நாயகன் மிர்ச்சி சிவாவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கேரளா புதுவரவு கிரேஸ் ஆண்டனி, நடிப்பு மற்றும் நகைச்சுவை இரண்டிலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அவருடைய கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸின் இருவரின் நடிப்பு திரையரங்குகளில் கைதட்டல் பெறுகிறது.

பறந்து போ திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜாஸ்வினி மற்றும் சில சிறுவர்கள் என இந்த தந்தை – மகன் பயணத்தில் ஒரு காட்சிகளில் தலை காட்டுபவர்களாக இருந்தாலும், ரசிகர்கள்  மனதில் நிலைத்து நின்று விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம், ஒளிப்பதிவு மூலம் இந்த பறந்து போ திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதைக்கு ஒளி ஓவியமாக வரைந்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் பாடல்களாக அல்லாமல் வசனங்களாக மனதை வருடுகிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில்
சோகமான பயணங்களை மட்டுமே திரைப்படமாக கொடுத்து வந்த இயக்குநர் ராம், முதல் முதலாக  மகிழ்ச்சிகரமான நல்ல ஒரு அருமையான ரசிகர்கள் மனதில் பதியக்கூடிய படைப்பாக கொடுத்திருப்பதோடு, திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை எதாவது ஒரு வகையில் திரைப்படத்துடன் பயணிக்க வைத்து விடுகிறார்.

இயக்குனர் ராம் போன்ற ஒரு சில இயக்குனர்கள் தமிழ் திரைப்பட உலகில்  இருப்பதால் மட்டுமே தமிழ் திரைப்பட உலகம் உலக அளவில் ஆஸ்கார் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் – ‘பறந்து போ’ கூண்டில் அடைபட்ட பறவை, சுதந்திரமாக பறக்க ஆசைப்படும் மனிதர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்ற   மிகவும் அருமையான ஒரு திரைப்படம்.

error: Content is protected !!