செங்களம் இனையத்தொடர் விமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5.

நடிகர் நடிகைகள் :- கலையரசன், வாணி போஜன், ஷரத் லோஹிஸ்தாஷ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேல ராமமூர்த்தி, பக்ஸ், முத்து குமார், டேனியல் அன்னி போப், அர்ஜி, பவன், பிரேம், கஜராஜ், பூஜா வைத்தியநாதன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  எஸ்.ஆர். பிரபாகரன்.

ஒளிப்பதிவு :- வெற்றிவேல் மகேந்திரன்.

படத்தொகுப்பு :- பிஜு. வி. டான் போஸ்கோ.

இசை :- தரன்.

தயாரிப்பு நிறுவனம் :- அபி & அபி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர்:- அபினேஷ் இளங்கோவன்.

ரேட்டிங் :- 3.75 / 5.

நடிகர் விமல நடிப்பில் வெளிவந்த விலங்கு இனையத்தெடர் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி பெற்றது.

அதன் பிறகு அயலி’ என்ற இணைய தொடரின் மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றியை கண்டது.

இதனை தொடர்ந்து ஜீ 5 என்னும் டிஜிட்டல் தளத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பு பற்றிய இணைய தொடராக ஒன்பது அத்தியாயங்களுடன் ‘செங்களம்’ வெளியாகி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தின் நகராட்சியின் மன்ற தலைவர் பதவியை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஷரத் லோகிதாஸின் குடும்பம் மற்றும் தாத்தா, அப்பா, மகன் என அவர்களது மொத்த குடும்பமே பரம்பரை பரம்பரையாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

இதனால், அவர்களது குடும்பத்திற்கு மக்களிடம் இருக்கும் மரியாதைக்கும், அரசியல் செல்வாக்கிற்கும் முற்றுப்புள்ளி வைத்து விருதுநகர் நகராட்சியை கைப்பற்ற மாநிலத்தை ஆளும் கட்சி திட்டமிடுகிறது.

அந்த தொகுதியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாக இருக்கும் வேல ராமமூர்த்திக்கு இல்லாத செல்வாக்கு, நகராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது.

இதனால், எப்படியாவது இந்த நாற்பது ஆண்டு கால பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை கலைக்க வேண்டும் என முடிவு செய்கிறார் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாக இருக்கும் வேல ராமமூர்த்தி.

தந்தை லோகிதாஸின் மூத்த மகன் பவன் நகராட்சி மன்ற தலைவராக இருக்கிறார்.

சரத் லோகிதாஸின் மூத்த மகனான நகராட்சி தலைவர் பவனுக்கு இரண்டாம் தாரமாக வாணி போஜனை திருமணம் செய்து வைக்கிறார்கள்.

திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் நகராட்சி தலைவர்
பவன் கொடைக்கானலுக்கு ஹனிமூன் செல்லும் வழியில் விபத்து ஒன்றில் பலியாகிறார்.

நகராட்சி தலைவராக இருந்த தனது கணவனை இழந்த
வாணி போஜனுக்கு அரசியல் ஆசை துளிர் விடுகிறது.

தனது அரசியல் ஆசையை கணவர் குடும்பத்தாரிடம் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், கணவன் வகித்த நகராட்சி தலைவர் பதவியை அமர்வதற்கு அவர் மிகப்பெரிய திட்டம் திட்டுகிறார்.

இது ஒரு புறம் இருக்க கலையரசன் மற்றும் அவருடைய இரண்டு தம்பிகள் சேர்ந்து செய்யும் தொடர் கொலைகளை செய்து கொண்டே வருகிறார்கள்.

அவர்கள் மூவரையும் காட்டுப்பகுதியில் தலை மறைவாகி விடுகிறார்கள்.

கலையரசன் மற்றும் அவர்கள் தம்பிகளை காவல்துறையினர் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தொடர் கொலைகளை செய்து வரும் கலையரசன் மற்றும் அவர் தம்பிகளை காவல்துறையினர் கைது செய்தார்களா? செய்யவில்லையா?
வாணி போஜன் நகராட்சி தலைவராக பதவி ஏற்றாரா? ஏற்கவில்லையா? என்பதுதான்
இந்த ‘செங்களம்’ இணையத் தொடரின் மீதிக்கதை.

இந்த இனையத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்துள்ளார்.

ராயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக நடித்திருக்கிறார்.

கலையரசன் தம்பிகளாக நடித்திருக்கும் டேனியல்
காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இதில் குணச்சித்திர வேடத்தில் கவனம் ஈர்க்கிறார்.

தம்பியாக வரும் லகுபரன் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

இந்த இணையத் தொடரில் வாணி போஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ‌

சூர்யகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணி போஜன் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுப்படுத்துவது போல் இவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாணி போஜன் தோழியான வரும் ஷாலி நிவேகாஷ், நாச்சியார் கதாபாத்திரத்தில் மிக அருமையாக கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் அளவிற்கு அவருடைய கதாபாத்திரத்தை அறிந்து நடித்திருக்கிறார்.

நாச்சியார் கதாபாத்திரம் சசிகலாவை நினைவுப்படுத்தும் கதாபாத்திரம் வடிவமைத்த விதமும் இணையத் தொடருக்கு ஹைலைட்டாக உள்ளது..

சக்கர நாற்காலியில் வலம் வரும் சரத் லோகிதாஸின் கதாபாத்திரம் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்களை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது.

தமிழகத்தில் இருக்கும் முக்கிய வாரிசு அரசியல் குடும்பத்தை நினைவுப்படுத்துகிறது.

வேல ராமமூர்த்தி முத்துக்குமார், கஜராஜ், பிரேம், பூஜா வைத்தியநாதன், விஜி சந்திரசேகர், பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன், அர்ஜை, பவன், மானஷா ராதகிருஷ்ணன் என இனையத் தொடரில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு அளவான நடிப்பு மூலம் கவனிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் விருதுநகர் மாவட்டத்தின் வரட்சியையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் மிகவும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் தரணின் பின்னணி இசை அரசியல் ஆட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

வாணி போஜன் கதைக்கும், கலையரசனின் நிகழ்கால கதைக்கும் தனித்தனியாக பீஜியத்தை கொடுத்து தொடர் முழுவதிலும் இசையமைப்பாளர் தரண் அதிகமான ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறார்.

முதல் எபிசோடில் இருந்து கடைசி எபிசோட் வரை காட்சி மற்றும் நிகழ்கால கதையை சொல்லி இனையத் தொடரின் முக்கிய சஸ்பென்ஸை இறுதி வரை யூகிக்க முடியாதபடி கொண்டு செல்லும் படத்தொகுப்பாளர் பிஜு வி.டான்பாஸ்கோவின் படத்தொகுப்பு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

குடும்ப அரசியலை விமர்சிப்பவர்களுக்கு வசனம் மூலம் தலையில் குட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

மொத்தம் 9 பாகங்களை கொண்ட இந்த தொடரின் ஒவ்வொரு பாகங்களிலும் சஸ்பென்ஸாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்..

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், தொடரின் இறுதி பாகத்தில் கூட ஒரு திருப்புமுனையை வைத்து, ரசிகர்கள் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறார்.

மொத்தத்தில் இந்த செங்களம் இணையத் தொடர் மக்கள் கண்டிப்பாக மகுடம் சூடுவார்கள்.

CLOSE
CLOSE
error: Content is protected !!