‘காந்தி டாக்ஸ்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதாரி,
சித்தார்த் ஜாதவ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கிஷோர் பாண்டுரங் ‘பேலேகர்’.

ஒளிப்பதிவாளர் :- கரண் பி. ராவத்.

படத்தொகுப்பாளர் :- ஆஷிஷ் மத்ரே.

இசையமைப்பாளர் :- ஏ.ஆர். ரஹ்மான்.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டுடியோஸ், கியூரியஸ், பின்க்மூன் & மூவிமில் என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர்கள் :- ராஜேஷ் கெஜ்ரிவால், குர்பால் சச்சார், உமேஷ் குமார் பன்சால், மீரா சோப்ரா, கிஷோர் பி பெலேகர், அனில் பண்டாரி, தீபக் ஆர். நங்கலியா.

ரேட்டிங் :-  3./5.

மும்பையில் சேரிப் பகுதியில்  குடியிருக்கும் கதாநாயகன் விஜய் சேதுபதி, அதே சமயம் வயதான தாய் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் அவருடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதியின் வீட்டிற்கு எதிரில்  குடியிருக்கும் கதாநாயகி அதிதி ராவ் ஹைதாரியை  காதலிக்கிறார்.

ஆனால் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு பல கம்பெனிகளில் இன்டர்வியூக்கு சென்றும் வேலை கிடைக்காததால்  ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதி ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூக்கு செல்லும் இடத்தில் 50,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வேலை கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கும் அரவிந்த்சாமிக்கு மிகப்பெரிய அளவில் அவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது.

மேலும் மிகப்பெரிய கோடீஸ்வரரான அரவிந்த்சாமியின் குடும்பத்தில் உள்ள அனைவரும்  எதிர்பாராத விதமாக இறந்து விடுகின்றனர்.

மேலும் மிகப்பெரிய கோடீஸ்வரரான அரவிந்த்சாமியின்  சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பறிமுதல் செய்கிறது.

ஏழையாக இருந்து பணம் சம்பாதிக்க நினைக்கும் கதாநாயகன் விஜய் சேதுபதியும், சொத்துக்கள்  அனைத்தையும் இழந்த  மிகப்பெரிய கோடீஸ்வரரான அரவிந்த்சாமி ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்கின்றனர்.

அதன் பிறகு கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு வேலை கிடைத்ததா?,  கிடைக்கவில்லையா?,

சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பறிமுதல் செய்ததால்  மிகப்பெரிய கோடீஸ்வரரான அரவிந்த்சாமிக்கு அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் இந்த ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை. 

இந்த ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி  தனது உடல்நிலை சரியில்லாத தாயை வைத்துக்கொண்டு ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக அதிதி ராவ் ஹைதாரி, நடித்துள்ளார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ் ஹைதாரி, மிகவும் அழகாக வந்து அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதையின் நாயகனாக விஜய் சேதுபதிக்கும் மற்றும் கதையின் நாயகியாக அதிதி ராவ் ஹைதாரிக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரியும் சிறப்பாக ஒர்க் ஆகி உள்ளது.

இந்த ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தில் மற்றொரு கதையின் நாயகனாக அரவிந்தசாமி நடித்திருக்கிறார்.

மற்றொஎரு கதையின் நாயகனாக நடித்திருக்கும் அரவிந்தசாமி போஸ்மேன் என்ற கதாபாத்திரத்தில்  மிகப்பெரிய தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நச்சென்று பொருந்தியுள்ளார்.

அரவிந்தசாமியின் தாய் தந்தை மனைவி, குழந்தை சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து ஒரு குடிகாரராக அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

இந்த ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து நடிகர் நடிகைகளும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத்தின் ஒளிப்பதிவு மூலம்  மும்பை நகரம் அழகாக காட்சியளிக்கிறது.

ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத்தின் ஒளிப்பதிவு மூலம் அரவிந்தசாமியின் வீட்டை காட்டிய விதம், சிறப்பு.

கதையின் நாயகன்விஜய் சேதுபதியின் வாழ்க்கையை காட்டிய விதம் திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மொத்த திரைப்படத்தையும் தாங்கி பிடிக்கிறார்.

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு மிகவும் பொறுமை தேவைப்படும் இரண்டாம் பாதி சுவாரசியமாக இருந்தாலும், முதல் பாதி சுவாரசியமாக இல்லை மேலும் வசனங்கள் இல்லாததால் ஒவ்வொரு காட்சிகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதே போல இந்த திரைப்படத்திற்கு வசனங்கள் வைத்திருந்தாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், ஏன் வசனம் வேண்டாம் என்ற முடிவை என் எடுத்தார் என்பதற்கான சரியான காரணங்களும் இல்லை.

மொத்தத்தில் ‘காந்தி டாக்ஸ்’ மனிதநேயத்தை பேசும் திரைப்படம்.

error: Content is protected !!