‘பரிமளா & கோ’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி மாஸ்டர், சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சுனில் குமார், ஜி கே எம் தமிழ் குமரன், பக்ஸ், சிங்கம் புலி, சென்ராயன், பூர்ணிமா ரவி, பி.எல்.தேனப்பன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பாண்டிராஜ்.
ஒளிப்பதிவாளர் :- ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC.
படத்தொகுப்பாளர் :- பிரதீப் E. ராகவ்.
இசையமைப்பாளர் :- Foxn.
தயாரிப்பு நிறுவனம் :- லைக்கா புரொடக்ஷன்ஸ், தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், பசங்க புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- சுபாஸ்கரன், ஜி கே எம் தமிழ் குமரன், இயக்குனர் பாண்டியராஜ்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் ( AIM )
ரேட்டிங் :- 3.5./5.
கதையின் நாயகன் ஜெயராம் (பரிமளா) மற்றும் கதையின் நாயகி ஊர்வசி (சுதந்திரம்) தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, (பராசக்தி) இளைய மகள் அனந்திகா சுனில் குமார், (மதுமிதா) மிகவும் சிக்கனமான நடுத்தர குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அதே ஏரியாவில் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்கும் சாண்டி (வர்கீஸ்) கதையின் நாயகன் ஜெயராமனின் இளைய மகள் அனந்திகா சுனில் குமார், (மதுமிதா)வை காதலிப்பதாக சொல்லி அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மூத்த மகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, (பராசக்தி) இடமும் தொல்லைக் கொடுக்கிறார்.
இதனால் பரிமளா & கோவிற்க்கு சாண்டி (வர்கீஸ்) மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறாள்.
இந்த பிரச்சனையிலிருந்து விடுபட சாண்டி (வர்கீஸ்) கதையின் நாயகன் ஜெயராம் (பரிமளா) மற்றும் கதையின் நாயகி ஊர்வசி (சுதந்திரம்) மகள்கள் மூத்த மகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, (பராசக்தி) இளைய மகள் அனந்திகா சுனில் குமார், (மதுமிதா) அனைவரும் இனைத்து கொன்று விட வேண்டும் என குடும்பத்துடன் முடிவெடுக்கிறார்கள் .
மறுநாள் காலை சாண்டி (வர்கீஸ்) மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்துகிடக்கிறார்.
சாண்டி (வர்கீஸ்) கொலை செய்தது யார்?, இதற்காக கொலை செய்தார்கள்.
உண்மையில் சாண்டி (வர்கீஸ்) கொன்றது யார் ?,
சாண்டி (வர்கீஸ்) மர்மமான முறையில் இறந்து கொலைக்கும் “பரிமளா & கோ” குடும்பத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ?, தொடர்பு இல்லையா ?, என்பதுதான் இந்த “பரிமளா & கோ” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “பரிமளா & கோ” திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருக்கிறார்.
பரிமளா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம் மிக அருமையாக பொருந்தி கஞ்சத்தனமாக தன்னுடைய குடும்பத்தை நடத்துவது மிக தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது இந்த கொலையை யார் செய்திருப்பார்களா? என தனது மனைவி ஊர்வசி (சுதந்திரம்) மற்றும் மகள்கள் மூத்த மகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, (பராசக்தி) இளைய மகள் அனந்திகா சுனில் குமார், (மதுமிதா) குடும்பத்தில் உள்ள அனைவரும் மீது சந்தேகப்படுவது மனைவி ஊர்வசி கொடுக்கும் குடைச்சலுக்கு எரிச்சலாகும் போது என பல காட்சிகளில் ரசிகர்களை சிரிக்க வைத்து மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
இந்த “பரிமளா & கோ” திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஊர்வசி நடித்திருக்கிறார்.
சுதந்திரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி வழக்கம்போல தன்னுடைய டயலாக் டெலிவரிகள் மற்றும் மாடுலேஷன் மூலம் இந்த திரைப்படத்திற்கு காமெடியில் மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம் ஊர்வசி தம்பதியினரின் மூத்த மகள் பராசக்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிக மிக சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இளைய மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த அனந்திகா சுனில் குமார், சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டர் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
வீட்டு ஓனர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு சிரிக்க வைத்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மிஷ்கின் அனைத்து காட்சிகளையும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் மேனரீசம் அசால்ட்டாக வழக்கை விசாரிப்பது என மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
காவல்துறை துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே எம் தமிழ் குமரன், கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
பூர்ணிமா ரவி ஒரு பாடல் காட்சிகள் மட்டும் வந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் .
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் பக்ஸ், சிங்கம் புலி, சென்ராயன், பி.எல்.தேனப்பன், என மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ் படத்தொகுப்பு திரைப்படத்தில் ஆங்காங்கே தொய்வு தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC. ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை தரமாக கொடுக்க உழைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் Foxn இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பரிமளா &கோ திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒரு பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் பாண்டிராஜ் இந்த அருமையான கதையை திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை, திரையில் மிக சோகமாக சொல்லாமல் மிகவும் சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியாக சொல்லி இருக்கிறார்
ஒரு சில காமெடி காட்சிகளில் ஆறுதல் அளிப்பது போல் கிளைமாக்ஸ் முன் உள்ள காட்சிகளில் போதை பொருட்களால் அடிமையாகி கிடக்கும் இளைஞர்களுக்கான முக்கியமான அறிவுரை ஒன்றை மிகவும் அழுத்தமாக சொல்லி திரைப்படத்தை காப்பாற்றி விடுவதோடு மட்டுமல்லாமல் குடும்பம் குடும்பமாக கொண்டாட கூடிய நகைச்சுவை மற்றும் மெசேஜ் சொல்லும் திரைப்படமாக மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
மொத்தத்தில், ‘பரிமளா & கோ’ திரைப்படம் சிரிப்பு மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த குடும்பம் குடும்பமாக கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்திருக்கிறது.







