இந்தியன் 2 திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-  கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா. மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஷங்கர்.

ஒளிப்பதிவாளர் :- ரவிவர்மன்.

படத்தொகுப்பாளர் :- ஸ்ரீகர் பிரசாத்.

இசையமைப்பாளர் :- அனிருத் ரவிச்சந்தர்.

தயாரிப்பு நிறுவனம் :- லைகா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- சுபாஸ்கரன்.

ரேட்டிங்:- 3.75/5.

இந்தியாவில் நடக்கும் ஊழல் குற்றங்களை தடுக்க முயற்சிக்கும் சித்தார்த் தனது நண்பர்கள் ஜெகன், ரிஷிகாந்த் தோழி பிரியா பவானி சங்கர், ஆகியோருடன் சேர்ந்து நடத்தும் பிரேக்கிங் டாக்ஸ் என்ற  யூடியுப் சேனல் மூலம் இந்தியா முழுவதும் நடக்கும் அவலங்களை லஞ்சம் வாங்குபவர்கள் ஊழல் குற்றம் செய்பவர்களை தங்கள் நடத்தி வரும் பிரேக்கிங் டாக்ஸ் யூடியூப் சேனலில் மூலமாக , ஊழல் செய்யும் அதிகாரிகள் கதாபாத்திரங்களை வைத்து கிண்டலாகவும் அவர்களுடைய முகத்திரையை கிழித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள்.

இவர்கள் நடத்தும் பிரேக்கிங் டாக்ஸ் யூடியூப் சேனலில் வீடியோக்கள் பதிவு செய்து அதன் மூலமாக சில அவலங்களை மக்களிடம் கொண்டு சென்றாலும், குற்றவாளிகள் ஊழல்வாதிகள் அனைவரும் தண்டிக்கப்படாமல் இருப்பதை கண்டு மனம் வருந்துகிறார் சித்தார்த்.

ஊழலை எதிர்த்து போராடும் சித்தார்த்தை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் இருக்கும் சித்தார்தை ஜாமினில் வெளியே எடுக்கும் காதலி ரகுல் ப்ரீத் சிங் தமிழகத்தில் தற்போதைய  சூழலை எடுத்துச் சொல்லி எதையும் மாற்ற முடியாது என கூற மனம் உடைகிறார் சித்தார்த்.

அதன் பிறகு இந்தியா முழுவதும் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழிக்க நினைக்க அது எதுவும் முடியாமல் போக, மீண்டும் இந்தியன் தாத்தாவை சித்தார்த் இந்தியாவிற்கு அழைக்க நினைக்கிறார்.

அதற்காக அவர் சமூக வலைதளங்கள் மூலம் Come Back Indian என்ற Hashtag உடன் மேற்கொள்ளும் பிரச்சாரம், உலகம் முழுவதும் பரவி  தைவான் நாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா கவனத்திற்கு செல்கிறது.

உலக மக்கள் அழைப்பை ஏற்று இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியா வந்தாரா? இந்தியா வரவில்லையா? உலகில் உள்ள லஞ்சம் ஊழல் அனைத்தையும் சரிப்படுத்தினாரா? சரிப்படுத்த வில்லையா? என்பதுதான் இந்த இந்தியன் 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த இந்தியன் 2 திரைப்படத்தில் கதை நாயகனாக உலக நாயகன் கமலஹாசன் நடித்துள்ளார்.

இந்தியன் தாதா கதாபாத்திரத்தில் முதுமையான உடல்மொழியை கச்சிதமாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறும் உலகநாயகன் கமல்ஹாசன், ஊழலுக்கு எதிராக பேசும் வசனங்கள் மூலம் அனைத்து திரையரங்குகளில் கைதட்டல் பெறுவதோடு, தனது நடிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி விசிலடிக்க வைத்திருக்கிறார்.

திரைப்படங்களில் பல அவதாரம் எடுக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த இந்தியன் 2 திரைப்படத்திலும் வேறு வேறு கெட்டப்களில் வந்து அசத்தியுள்ளார்.

மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார்.

மிகவும் நேர்மையாக வாழ வேண்டும் என்று கருதும் இளைஞராக, தவறு செய்தது தந்தையாக இருந்தாலுமே தண்டனை கிடைக்க வேண்டும் என்று கருதும் இளைஞராக சித்தார்த் தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை இந்த இந்தியன் 2 திரைப்படத்தில் நிரூபித்துள்ளார்.

காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங்,  பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா அனைவருடைய அளவான நடிப்பு திரைக்கதைக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா ஒரு சில  காட்சிகளில் வந்தாலும், மூன்றாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம்  பெரிய அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு மூலம் இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட கற்பனைக்கு பெரிதும் கை இருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு மூன்று மணி நேரம் திரைப்படத்தை அலுப்பில்லாமல் ரசிகர்களை பார்க்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகம் தான்.

பின்னணி இசை வேகமான திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், இந்தியன் முதல் பாகத்தின் பின்னணி இசையே முன்னணி வைக்கிறது.

இந்தியன் முதல் பாகத்தை ஓப்பிட்டு பார்த்தால் இயக்குநர் ஷங்கர் இதில் சற்று தடுமாறியிருப்பது தெரிந்தாலும், திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள்,  இந்தியாவின் மிகப்பெரும் புள்ளிகளை இந்தியன் தாத்தா நெருங்கும் காட்சிகள், காலண்டர் மற்றும் தாத்தா வராரே ஆகிய பாடல்கள் உள்ளிட்டவை மூலம் பிரமாண்டம் என்ற தனது மாயாஜாலம் மூலம் மக்களை முழுமையாக திருப்திப்படுத்தி இருக்கிறார்.

இறுதிக்காட்சியில் நாடே கொண்டாடிய இந்தியன் தாத்தாவுக்கு எதிர்ப்பு வருகிறது.

அது ஏன் எதற்காக? என்ற கேள்விக்கான விடையாக மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மொத்தத்தில் – இந்தியன் 2 நம்மை சிந்திக்க வைத்து, இந்தியன் 3யை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்துள்ளது.

error: Content is protected !!