‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- வெற்றி,  ரங்கராஜ் பாண்டே, பிரிஜிடா சாகா, மாறன், சரவணன், லிசி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி, சுப்ரமணியம் சிவா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தயாள் பத்மநாபன்.

ஒளிப்பதிவாளர் :- எம்.வி.  பன்னீர்செல்வம்.

படத்தொகுப்பாளர் :- பூபதி வேதகிரி.

இசையமைப்பாளர் :- தர்புகா சிவா.

தயாரிப்பு நிறுவனம் :- 2எம் சினிமாஸ்.

தயாரிப்பாளர்கள் :- கே.வி. ஷபர்ரீஷ், இயக்குனர் – தயாள் பத்மநாபன்.

மக்கள் தொடர்பு :- ரேகா.

ரேட்டிங் :-  4./5.

1944-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நிகழ்ந்த ஒரு தமிழ் பத்திரிகையாளர் சி.என். லட்சுமிகாந்தன் கொலை தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க குற்றவியல் நிகழ்வாகும்.

பத்திரிகையாளர் சி.என். லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கிற்கும், இந்த திரைப்படத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வருமையில் சிக்கித்தவிக்கும் கதாநாயகன் வெற்றி திருட்டுத் தொழிலை செய்து வருகிறார்.

தனக்கு வேலை கிடைக்கும் வரை அந்த திருட்டு தொழில் செய்து கொண்டு அதையே தொழிலாக வைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் வெற்றி அவருடைய சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகிறார்.

கதாநாயகன் வெற்றியின் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம்  மரண தண்டனை விதிக்கிறது.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன்னுடைய குற்றத்திற்கான தண்டனையாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கும் வாதத்தை கதாநாயகன் வெற்றி முன் வைக்கிறார்.

கதாநாயகன் வெற்றியின்   கொலை குற்றவாளியான சூழ்நிலை என்ன ?, யாரை எதற்காக கதாநாயகன் வெற்றி கொலை செய்தார் ? என்பதுதான் இந்த லட்சுமி காந்தன் கொலை வழக்கு
திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த லட்சுமி காந்தன் கொலை வழக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக வெற்றி நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் வெற்றி கதைக்குத் தேவையான நடிப்பும், பதற்றம் இல்லாத வசன உச்சரிப்பும் திரைக்கதையில் இடம்பெறும் வாதங்களுக்கு மிகப்பெரிய அளவில் திரைப்படத்திற்கு  பலம் சேர்க்கிறது.

இந்த லட்சுமி காந்தன் கொலை வழக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக பிரிகிடா சகா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகாவிற்க்கு, கிராமத்து பெண் கதாபாத்திரத்தில், எதார்த்தமான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சிறைச்சாலை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, வெற்றியின் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யும் கதாபாத்திரத்தில் கம்பீரமான தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகன் வெற்றி நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாறன், அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியை தூக்கிலிடும் ஹேங்மேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.

ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம், ஒளிப்பதிவு மூலம் கதையின் சூழலுக்கு ஏற்ப சூரிய ஒளியையும், குறைவான விளக்குகளையும் பயன்படுத்தி காட்சிகளை  திரைப்படமாக்கியிருப்பது ரசிகர்களை இந்த திரைப்படத்தோடு பயணிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இசையும், மகாகவி பாரதியார், மற்றும் “புரட்சிக் கவிஞர்” பாரதிதாசன் மற்றும் இயக்குனர் தயாள் பத்மநாபன் ஆகியோரது பாடல் வரிகளும் கதைக்களத்தை  பிரதிபலிக்கும் வகையில் பயணித்திருக்கிறார்.

பின்னணி இசை இறுக்கமான சூழல்களுக்கு ஏற்ப பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

இயக்குனர் நடிகர் கவிதா பாரதி மற்றும் இயக்குனர் தயாள் பத்மநாபன் இருவரின் திரைக்கதை மற்றும் வசன காட்சிகள் அதிகம் என்றாலும், வசனங்கள் அனைத்தும் ரசிகர்கள் கைதட்டி பாராட்டும் வகையில் அமைந்திருப்பது திரைப்படத்திற்கு மாபெரும் பலம்.

மிகவும் சாதாரண கதைக்களம் மூலம் மனிதர்களின், மனதில் உள்ள எண்ணங்களையும்,  குற்றவாளியின் பார்வையில் மரண தண்டனை என்பது சாமானியன் ஒருவனுக்கு நீதி மறுக்கப்படுவதற்கு சமம், என்ற ரீதியில் சிறப்பான திரைக்கதை வசனத்தின் மூலம் காட்சிகள் வாதங்களாக நகர்ந்தாலும், அதை ரசிகர்கள் ரசிக்கும் அளவிற்கு  சுவாரசியமான திரைப்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.

மொத்தத்தில், ‘லக்‌ஷ்மி காந்தன் கொலை வழக்கு’ திரைப்படம் பாரட்டப்பட வேண்டிய சிறப்பான படைப்பு.

error: Content is protected !!