“கம்பி கட்ன கதை” திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- நடராஜ் சுப்ரமணியன், சிங்கம்புலி, முத்துராமன், முகேஷ் ரவி, கராத்தே கார்த்தி, ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, வழக்கு எண் முத்துராமன், வெற்றி வேல்ராஜன், டி.எஸ்.ஆர், கோதண்டன், முருகானந்தம், , மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராஜநாதன் பெரியசாமி.

ஒளிப்பதிவாளர் :- எம்ஆர்எம் ஜெய்சுரேஷ்.

படத்தொகுப்பாளர் :- எஸ்.என். ஃபாசில்.

இசையமைப்பாளர் :- சதீஷ் செல்வம்.

தயாரிப்பு நிறுவனம் :- மங்காத்தா மூவீஸ்.

தயாரிப்பாளர் :- ரவி.

ரேட்டிங் 2./5.

உலகப் புகழ் பெற்ற கோஹினூர் திருடப்பட்ட இரண்டு பச்சை வைரத்தை ஒன்று இங்கிலாந்து மகாராணியிடம் மற்றொரு வைரத்துடன் இங்கிலாந்து மகாராணிக்கு பரிசளித்த அந்த வெள்ளைக்காரர் நபரே இன்னொரு வைரத்தை திருடிவிட்டார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த வைரத்தை அடைய விரும்பி மிகப்பெரிய அரசியல்வாதி அந்த வைரத்தை தேடி கண்டுபிடிக்க சில காவல்துறையை சேர்ந்தவர்களை நியமிக்கிறார்.

நேரடியாக காவல்துறையினர் தலையிட்டால் அது பல சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அதற்கு ஒரு நம்பிக்கையான திருடனை தேடிக் கடைசியில் கதாநாயகன் நட்டி நடராஜ் காவல்துறையினர் கண்டுபிடிக்கிறார்கள்.

அந்த வைரத்தைக் கண்டுபிடிப்பதற்கு எற்றுக் கொள்ளும் கதாநாயகன் நட்டி நடராஜ், அந்த வைரம் தன் கைக்கு கிடைத்ததும் அந்த வைரத்தை தன்னைத்தானே அடைய நினைக்கிறார்.

கதாநாயகன் நட்டி நடராஜ் கையில் கிடைத்த அந்த வைரத்தை வயல்வெளியில் புதைத்து வைக்கிறார்.

அதன் பிறகு கதாநாயகன் நட்டி நடராஜ் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அடைக்கப்படுகிறார்.

அதன் பின்னர் கதாநாயகன் நட்டி நடராஜ் வைரத்தை புதைத்து வைத்த அந்த வயல்வெளியில் போய் தேடும் போது அந்த இடம் ஒரு ஆசிரமமாக மாறி இருக்க வைரம் பறிப்போய் விட்டதே என அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு பறிபோன வைரம் கதாநாயகன் நட்டி நடராஜிடம் கையில் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த “கம்பி கட்டுன கதை” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “கம்பி கட்டுன கதை” திரைப்படத்தில் கதாநாயகனாக நட்டி நடராஜ் சுப்ரமணியன் நடித்திருக்கிறார்.

மக்களை ஏமாற்றும் கதைக்கு கதாநாயகனாக நட்டி நட்ராஜ் சுப்பிரமணியன் மட்டுமே இப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஓட்டுவார் என சதுரங்க வேட்டைக்கு பின் இப்படி ஒரு வில்லங்கமான கதைக்கு எற்ற கதாபாத்திரத்தில் கதாநாயகன் நட்டி நடராஜ் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த “கம்பி கட்டுன கதை” திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக முகேஷ் ரவி நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் முகேஷ் ரவி மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த “கம்பி கட்டுன கதை” திரைப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, இருவரும் நடித்துள்ளார்கள்.

கதாநாயகன் நட்டி நடராஜ் சுப்ரமணியன் ஜோடியாக ஸ்ரீரஞ்சினி மற்றொரு கதாநாயகன் முகேஷ் ரவி ஜோடியாக ஷாலினி, கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

இந்த கம்பி கட்டின கதை திரைப்படத்தில் கதாநாயகன் நட்டி நடராஜ் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம் புலி, கதாநாயகி ஷாலினியைக் கொலை செய்ய வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முருகானந்தம், தீவுக்கு ஒரு மனைவி என்று வைத்துக் கொண்டும் குழந்தை பாக்கியம் தேடி வரும் பூனை சுல்தான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோதண்டம், அவரது மொழி பெயர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாவா சுந்தரேசன் என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள். 

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கராத்தே கார்த்தி, சட்டமன்ற உறுப்பினர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வழக்கு எண் முத்துராமன், மேஸ்திரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி வேல்ராஜன், பத்திரிகையாளர் பால் பாயாசம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டி.எஸ்.ஆர், அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.எம் ஜெய்சுரேஷ் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தில் உள்ள அனைத்து காட்சிகளிலும் கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் காமெடிக்கு குறைவில்லாமல் அந்த திரைப்படம் குறையை தீர்க்கும் விதமாக சுந்தர்.சி பாணியில் நகைச்சுவை திரைப்படத்தை மிகச் சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி. 

மொத்தத்தில், இந்த கம்பி கட்ன கதை திரைப்படத்தை ரசிகர்கள் கம்பி கட்டாமல் பார்க்கலாம்.

error: Content is protected !!