’அக்யூஸ்ட்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா கலகேரி, சாந்திகா , பவன், தயா பனீர் செல்வம் , ஸ்ரீதர், பிரபு ஸ்ரீனிவாஸ், பிரபு சாலமன், சங்கர் பாபு, ஜெயக்குமார், தீபா பாஸ்கர் , சுபத்ரா, டி சிவா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிரபு ஸ்ரீனிவாஸ்.
ஒளிப்பதிவாளர் :- மருதநாயகம்.ஐ
படத்தொகுப்பாளர் :- கே.எல் பிரவீன்.
இசையமைப்பாளர் :- நரேன் பாலகுமார் .
தயாரிப்பு நிறுவனம் :- ஜெய்ஷன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதாயகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- ஏ.எல்.உதயா, “தயா” என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல்.
ரேட்டிங் :- 2.5./5.
எம்.எல்.ஏவை கொலை செய்த வழக்கில் கொலை குற்றவாளியான கதாநாயகன் உதயா, கொலை வழக்கை விசாரிப்பதற்காக சேலம் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்த வேண்டும் என்பதற்காக புழல் சிறையில் இருக்கும் கதாநாயகன் உதயாவை சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து சொல்கிறார்கள்.
கதாநாயகன் உதயாவை சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் காவலர்கள் குழுவில் பயிற்சி காவலரான மற்றொரு கதாநாயகன் அஜ்மலை காவல்துறை உதவி ஆணையாளர் உத்தரவின் பெயரில் அந்தக் குழுவுடன் இணைகிறார்.
கதாநாயகன் உதயாவை சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் காவல்துறை வாகனத்தில் சிறிய பழுது காரணமாக காவல்துறையினர், மற்றும் கதாநாயகன் உதாயா சேலம் செல்லும் அரசு பேருந்தில் அனைவரும் பயணம் செய்கிறார்கள்.
இதற்கிடையே, கொலை குற்றவாளியான கதாநாயகன் உதயாவை கொலை செய்வதற்கு கும்பல் ஒன்று துரத்துவதோடு, கொலை குற்றவாளியான கதாநாயகன் உதயா உடன் பயணிக்கும் காவல்துறை ஆய்வாளரும் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டுவதோடு, அதற்கு முட்டுக்கட்டையாக பயிற்சி காவலரான மற்றொரு கதாநாயகன் அஜ்மல் இருப்பதால், அவரையும் கொலை செய்ய முடிவு செய்கிறார்கள்.
எதற்காக கதாநாயகன் உதயா எம்எல்ஏ வை கொலை செய்தார்.
கொலை குற்றவாளியான கதாநாயகன் உதயா யார்?,
கொலை குற்றவாளியான கதாநாயகன் உதயாவின் பின்னணி என்ன ?,
கதாநாயகன் உதயாவை கொலை செய்வதற்காக துரத்தும் வடமாநில கும்பல் யார் ?,
கொலை குற்றவாளி ஆன கதாநாயகன் உதயாவை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே எதற்காக கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் ?,
இத்தனை கொலை கும்பலிடம் இருந்து கதாநாயகன் உதயாவை காப்பாற்றி பயிற்சி காவலர் அஜ்மல் கொலை குற்றவாளியான கதாநாயகன் உதயாவை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினாரா?, அஜர்ப்படுத்தவில்லையா?, என்பதுதான் இந்த ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அக்யூஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக உதயா நடித்திருக்கிறார்.
கணக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல், மற்றும் ரவுடிதனம் நகைச்சுவை காட்சிகளில் மிகவும் கணக்கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, அதிகமாக நடித்து திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்று விடுகிறார்.
கதாநாயகன் உதயாவின் நடிப்பும், உழைப்பும் அந்த உணர்வை மறக்கடித்து படத்தை சற்று ரசிக்க வைக்கிறது
இன்னும் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் மட்டுமே நிச்சயம் தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களின் பட்டியலில் நடிகர் உதயா இடம் பிடிப்பது உறுதி.
இந்த அக்யூஸ்ட் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக அஜ்மல் நடித்திருக்கிறார்.
காவல்துறை பயிற்சி காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜ்மல், சாதாரண காவலராக எண்ட்ரி கொடுத்தாலும், காவல்துறையின் பலம் மற்றும் பலவினம் காவல்துறையினரின் துப்பாக்கியின் வீரியம் போல், மிடுக்காகவும், துடுக்காகவும் அடிக்கடி தனது வருங்கால மனைவியுடன் போனில் பயந்து பயந்து பாசமாகவும் பேசும் காட்சிகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த அக்யூஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக ஜான்விகா கலகேரி, நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா கலகேரி,, எளிமையாக இருந்தாலும், நடிப்பு மற்றும் சிறப்பான நடனத்தில் அசத்தியிருக்கிறார்.
இந்த அக்யூஸ்ட் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக சாந்திகா நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகன் அஜ்மலின் ஜோடியாக செல்போனில் மட்டுமே காதல் செய்யும் மற்றொரு கதாநாயகி சாண்டிகாவின் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் நடிப்பிலும் எந்த விதத்திலும் நடிப்பில் எந்த விதமான குறையில்லை.
நடிகர் யோகி பாபுவின் கதாபாத்திரம் சிரிக்க வைப்பதோடு, மட்டுமல்லாமல் கதை மற்றும் திரைக்கதையோடு ஒன்றி நடிப்பின் மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவன், எம்.எல்.ஏ மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபத்ரா, எம்.எல்.ஏ-வின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதர், தயா பன்னீர்செல்வம், இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், கதாநாயகனின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா பாஸ்கர், அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டி.சிவா என அனைத்து கதாபாத்திரங்களும் பொருத்தமான தேர்வாக அமைந்தாலும் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் மருதநாயகம் ஒளிப்பதிவு மூலம் ஆக்ஷன் காட்சிகளையும், சேசிங் காட்சிகளையும் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்துள்ளார்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள், மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு மிகக் சிறப்பாக இசையை கொடுத்து பயணித்திருக்கிறது.
கமர்ஷியல் ஆக்ஷன் கதையை பல திருப்பங்களோடு சொல்ல முயற்சித்திருக்கிறார். இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ்.
மொத்தத்தில், ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.











