‘சாவீ’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- உதய தீப், ஆதேஷ் பாலா, யாசர், அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே சேஷாத்ரி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆண்டனி அஜித்.

ஒளிப்பதிவாளர் :- பூபதி வெங்கடாச்சலம்.

படத்தொகுப்பாளர் :- சுந்தர் எஸ், ராகேஷ் லெனின்.

இசையமைப்பாளர்கள் :- சரண் ராகவன், வி.ஜே.ரகுராம்.

தயாரிப்பு நிறுவனம் :- ஆண்டனி அஜித் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- ஆண்டனி அஜித்.

ரேட்டிங் :- 3./5.

கதாநாயகன் உதய தீப், தன்னுடைய தந்தையை தன் இரண்டு மாமன்கள் தான் கொலை செய்ததாக நினைத்து அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

தனது மாமன் மகள் கவிதா சுரேஷ், கதாநாயகன் உதய தீப், காதலிக்கிறார்.

இதற்கிடையே, கதாநாயகன் உதய தீப் ஒரு மாமன் கதாநாயகி கவிதா சுரேஷ் தந்தை சாலை விபத்தில் மரணம் அடைகிறார்.

கதாநாயகி கவிதா சுரேஷ் வீட்டில் தனது தந்தையின் பிணம் இருக்கும் துக்க வீட்டில் இரவு நேரம் ஆனால்  அனைவரும் அசதியில் தூங்கிவிட பிணம் காணாமல் போய் விடுகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஆய்வாளர் ஆதேஷ் பாலா, காணாமல் போன அந்த பிணத்தை தேடி வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும் நிலையில் கதாநாயகன் உதயதீப் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார்.

தொடர்ந்து நடந்த இந்த இரண்டு மரணங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா?,  கண்டுபிடிக்கவில்லையா?,

கதாநாயகன் உதய் தீப்பின் மாமனின் பிணம் கிடைத்ததா?,  கிடைக்கவில்லையா?, என்பதுதான் சாவீ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சாவீ திரைப்படத்தில் கதாநாயகனாக உதய் தீப் நடித்திருக்கிறார்.

ஜூட் மாரிமுத்து  எனற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் உதய தீப், நடிப்பு காமெடி நடனம் அனைத்திலும் அசால்டாக நடித்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளர் சக்கரவர்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, விசாரணை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.

கிரண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராட்சசன் யாசர், வீரயா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் அஜய், கதாநாயகன் உதய் தீப் மாமன்  ஆரோக்கிய ராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம் கே.சேஷாத்ரி என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் எளிமையாகவும், இயல்பாகவும் காட்சிப்படுத்தி திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.  

இசையமைப்பாளர்கள் சரண் ராகவன், வி.ஜே.ரகுராம் இருவரது இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு எவ்விதமான குறைகளும் இல்லாமல் சிறப்பாக பயணத்திருக்கிறார்கள்.

தற்போது பல நாட்களாக சமூக வலைத்தளங்கள் “சாவு வீடு” என்ற திரைப்படத்தின் தலைப்பை வயிறு மாதிரி இருந்த நிலையில் தற்சமயம் ’சாவீ’ என்று மாற்றி புதிய தலைப்புடன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

சாவு வீட்டில் நடக்கும் சிறிய சம்பவத்தை வைத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைக்கதையை பிளாக் காமெடியாக இந்தத் திரைப்படத்தை இயக்குறது மட்டுமல்லாமல் இந்த “சாவீ” திரைப்படத்தை தயாரிக்கும் செய்திருக்கிறார் இயக்குனர் ஆண்டனி அஜித்.

மொத்தத்தில், ‘சாவீ’ திரைப்படம் மூலம் தற்போது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள போதை கலாச்சாரம் மற்றும் அதன் ஆபத்து பற்றி திரை மொழியில் கூறியிருக்கிறார்.

error: Content is protected !!