திரையுலக உறவுகளின் சங்கமத்தில்… மதுரையில் மணமக்களை நேரில் வாழ்த்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்!
திரையுலக உறவுகளின் சங்கமத்தில்… மதுரையில் மணமக்களை நேரில் வாழ்த்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்!
சென்னை 14 நவம்பர் 2026 துரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் மகன் திருமண விழா, திரையுலகப் பிரபலங்களின் வருகையால் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் கலந்து கொண்டு மணமக்களை நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
திரையுலகில் தயாரிப்பாளர்களின் நலன், திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் புதிய முயற்சிகளுக்கு ஆதரவளித்து வரும் ஜி.கே.எம். தமிழ்க்குமரனின் வருகை இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
மணமக்களுடன் அன்புடன் உரையாடி, அவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியும் வளமும் நிறைந்ததாக அமைய தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தத் திருமண விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் மற்றும் நடிகர் சஞ்சீவ் ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திரையுலகைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது விழாவை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றியது.
உறவுகளின் அன்பும், நண்பர்களின் வாழ்த்துகளும், திரையுலகப் பிரபலங்களின் வருகையும் இணைந்த இந்தத் திருமண விழா, மதுரையில் இனிய நினைவுகளுடன் நடைபெற்றது.
மணமக்களின் புதிய வாழ்க்கைப் பயணம் அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் வளத்துடன் சிறக்க அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.












