திரை வரலாற்றின் பக்கங்களை எழுதிய கரம் ஓய்ந்தது… பத்திரிகை உலகின் ஆளுமை பொம்மை சாரதி மறைந்தார்!

திரை வரலாற்றின் பக்கங்களை எழுதிய கரம் ஓய்ந்தது… பத்திரிகை உலகின் ஆளுமை பொம்மை சாரதி மறைந்தார்!

சென்னை 18 நவம்பர் 2026 தமிழ்த் தமிழ்த் திரையுலகின் மூத்த பத்திரிகையாளரும், 85 ஆண்டுகாலம் தமிழ்த் திரைப்படத் துறைக்குத் தனது சேவையை வழங்கியவருமான திரு. பொம்மை சாரதி (வயது 93), 18.11.2026 அன்று அதிகாலை 01.25 மணியளவில் பெங்களூருவில் உள்ள தீபஸ்ரீ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.பத்திரிகைப் பணியில் அவரது பயணம்:

தமிழ்த் திரைப்படப் பத்திரிகைத் துறையில் தனது பயணத்தை ‘பேசும்படம்’ இதழில் துணை ஆசிரியராகத் தொடங்கியவர் திரு. பொம்மை சாரதி.தொடர்ந்து, டால்டன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியான ‘பொம்மை’ மற்றும் ‘மங்கை’ இதழ்களின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.மேலும், முரசொலி குழுமத்தின் ‘குங்குமம்’, ‘சுமங்கலி’ ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். பின்னர், பொன்மாலை தொலைக்காட்சியில் (தற்போதைய சன் டிவி நெட்வொர்க் குழுமம்) கிரியேட்டிவ் கன்சல்டன்ட்டாகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.தமிழ்த் திரைப்படத் துறைக்கு 85 ஆண்டுகாலம் தனது பத்திரிகைப் பணி, அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பால் அரும்பணியாற்றியவர்.

குடும்பத்தினர்:

மகள்கள்:

* லட்சுமி
* லாவண்யா

மருமகன்கள்:

* சங்கர்
* அருண் பரமேஸ்வரன்

பேரக்குழந்தைகள்:

* அனன்யா அருண்
* ஸ்ருதி வி. சங்கர்
* சோனா வி. சங்கர்

தொடர்புக்கு:

லாவண்யா – +91 9900856350
பெங்களூரு.

அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Date of birth :24-01-1933
Date of Death : 18-11-2026

CLOSE
CLOSE
error: Content is protected !!