பொம்மை திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5./ 5.
நடிகர் நடிகைகள் :- எஸ்.ஜே.சூரியா, பிரியா பவானி சாகர், சாந்தினி தமிழரசன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராதா மோகன்.
ஒளிப்பதிவு :- ரிச்சர்ட் எம்.நாதன்.
படத்தொகுப்பு :- ஆன்டனி.
இசை :- யுவன் சங்கர் ராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- ஏஞ்சல் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- வி.மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர் தீபா டி துரை.
ரேட்டிங் :- 2.5./ 5.
சென்னையில் தனிமையில் வாழ்ந்து வரும் கதாநாயகன் எஸ். ஜே. சூர்யா பெரிய துணிக்கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யா அதற்காக பல மருந்துகளை எடுத்துக்கொண்டு வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
அப்போது அவர் வேலை செய்யும் இடத்தில் அங்கு புதிதாக தாடையில் சிறிய தழும்புடன் பொம்மை ஒன்று வர கதாநாயகன் எஸ். ஜே. சூர்யாவின் காதலி போலவே இருக்கிறது.
தனது சிறுவயதில் உள்ள அவருடைய காதலியை நினைவூட்டுவது போன்று இருக்கும் இந்த பொம்மையை தனது காதலியாக நினைத்து கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யா வாழ ஆரம்பித்து விடுகிறார்.
கதாநாயகன் எஸ் ஜே சூர்யா ஊரில் இல்லாத சமயத்தில் அந்த பொம்மையை ஒரு கடைக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள்.
கதாநாயகன் எஸ் ஜே சூர்யா ஊரிலிருந்து வந்து பார்க்கும் போது பொம்மை இல்லாததை கண்டு பொங்கியெழும் கதாநாயகன் எஸ். ஜே. சூர்யா கோவப்பட்டு ஒரு கொலையைச் செய்து விட்டு தன் காதலியாக பாவிக்கும் பொம்மை இருக்கும் துணி கடைகளைத் தேடி அலைந்து கடைசியில் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அங்கேயே போய் வேலைக்கு சேர்ந்து அந்த பொம்மையோடு வாழ்ந்து வருகிறார்.
கொலை தொடர்பான காவல் துறையினர் ஒரு பக்கம் விசாரணை நடந்து வருகிறது?
இறுதியில் கொலை செய்துவிட்டு தப்பிய கதாநாயகன் எஸ். ஜே. சூர்யாவை காவல்துறையினர் கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா?
கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யாவின் காதல் என்ன ஆனது? என்பதுதான் இந்த பொம்மை திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பொம்மை திரைப்படத்தில் கதாநாயகனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார்.
மனநலம் பாதித்த கதாபாத்திரம் என்பது எஸ்.ஜே.சூர்யாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மிகவும் அருமையாகச் நடித்து விட்டார்.
பயம், பதட்டம், மகிழ்ச்சி என ஒவ்வொரு காட்சிகளிலும் கூடிக்கொண்டே போகும் அவரின் நடிப்பு திரையரங்கு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனம் பெறுகிறது.
கதாநாயகன் எஸ் ஜே சூர்யா குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் வெவ்வேறு எமோஷன்களை முகத்தில் காட்டி மிரட்டியிருக்கிறார்.
பொம்மையாக வரும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
கதாநாயகி பிரியா பவானி சங்கர் சிறப்பு. அள்ளிக்கொள்ளும் அழகு. முகபாவனைகளில் ஈர்க்கிறார்.
சாந்தினி தமிழரசனும் தன் பங்குக்கு சிறப்பு சேர்க்கிறார். அவர் இன்னும் கொஞ்சநேரம் வந்திருக்கலாம்.
சாந்தினி தமிழரசன் தனக்கான கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக அமைந்திருக்கின்றன.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என்றாலும் திரைப்படம் நெடுக இளையராஜாவின் தெய்வீகராகம் பாடல் ஆட்கொண்டிருக்கிறது.
மற்றபடி பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் திரைப்படத்தை காப்பாற்றி இருக்கிறார்.
மிகவும் வித்தியாசமான கதையை இயக்க நினைத்துள்ளார் இயக்குனர் ராதா மோகன்.
அழுத்தமான காதல் கதையை கொண்டிருந்தாலும் சுவாரஸ்யமற்ற திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துகிறது.
நாம் ஏற்கனவே பார்த்த வழக்கமான பிளாஷ்பேக், எளிதில் கணிக்கக்கூடிய கிளைமேக்ஸ் போன்ற காட்சிகள் திரைப்படத்திற்கு அழுத்தம் சேர்க்கவில்லை.
இந்தக் கதை ஏற்கனவே ஹாலிவுட் திரைப்படம் மேரி குயின் மற்றும் மலையாளத்தில் சிலை என்ற திரைப்படங்களும் வந்திருக்கிறது.
மொத்தத்தில் பொம்மை திரைப்படத்தில் பொம்மைக்கு உயிர் கொடுத்து விட்டு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை உயிரை எடுத்து விட்டார் இயக்குனர் ராதாமோகன்.