கருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் – கராத்தே தியாகராஜன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இதற்காக தன் ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, நிர்வாகிகளை பதவியில் அமர்த்தியுள்ளார்.
மேலும் மாவட்டம் தோறும் கட்சியில் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.

விரைவில் கட்சி பற்றிய அறிவிப்பு வரும் என தமிழகமே எதிர்பார்த்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் அவர்கள் ரஜினி கட்சி பற்றி பேசியுள்ளார்.

அப்போது வருகிற. 2020 மார்ச் மாதத்திற்குள் ரஜினி கட்சியை ஆரம்பிப்பார்.

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியை பற்றி சீமான் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளார் கராத்தே தியாகராஜன்.

error: Content is protected !!