சந்திரயான்-2′ விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்குவது குறித்த தகவல்

‘சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வு பற்றிய செய்தி சேகரிக்கவும், 📷படம் பிடிக்கவும் பெங்களூருவில் உள்ள பீனியா செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களோடு, வெளிநாட்டு நிருபர்களும் நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டு தனி அரங்கில் நிகழ்வை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த நிகழ்வினை பிரதமர் மோடியுடன், பள்ளி மாணவர்களும் இதனை பார்த்து கொண்டுள்ளார்கள். இதற்கிடையே, ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கி இருக்க வேண்டும் என்ற நிலையில், இது குறித்த தகவல் எதுவும் புலப்படவில்லை. இதனால் இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் உச்சகட்ட பரபரப்பில் விஞ்ஞானிகள் உள்ளனர். எனினும் எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!