புகை பிடிக்கும் காட்சியால் சர்ச்சையில் சிக்கிய திரைப்படங்கள் ‼*
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் அதிகமான புகை பிடிக்கும் காட்சிகள் மற்றும் மது குடிக்கும் காட்சிகள் இருப்பதால், துருவ்விற்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதே போல நடிகை ராதிகாவிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ‛மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சியில் நடித்திருப்பதற்கு எதிராக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.











