சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடித்த “நெற்றிக்கண்” திரைப்படம் ரீமேக் நடிகர் தனுஷுக்கு இயக்குனர் விசு எச்சரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடித்த “நெற்றிக்கண்” திரைப்படம் ரீமேக் நடிகர் தனுஷுக்கு இயக்குனர் விசு எச்சரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1981ல் ரிலீசாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘நெற்றிக்கண்’.

இதில் ரஜினிகாந்துடன் நடிகை லட்சுமி, சரிதா, மேனகா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இயக்குனர் விசு கதை எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்க கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த நிலையில் நெற்றிக்கண் திரைப்படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகவும் அதில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இது பற்றி இயக்குனர் விசு கூறியதாவது..

நெற்றிக்கண் திரைப்படத்தை நடிகை தனுஷ் ரீமேக் செய்யவுள்ளதாக கேள்விபட்டேன். அது உண்மையாக இருக்குமானால் கவிதாலயாவிடம் அவர் உரிமம் வாங்குவதை விட கதாசிரியரான என்னிடம் முதலில் கேட்க வேண்டும்.

என்னிடம் உரிமம் பெறாமல் நெற்றிக்கண் திரைப்படத்தை ரீமேக் செய்தால் நடிகர் தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.” என இயக்குனர் விசு கூறியுள்ளார்.

நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பல படங்கள் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CLOSE
CLOSE
error: Content is protected !!