அரசியல் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் மறுபக்கம்.. மாஸ்டர் திரைப்படத்தின் இசை விழாவில் மாற்றம்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் & மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’.
இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15 ஆம் தேதி சென்னையிலுள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தளபதி விஜய் திரைப்படம் போலவே அவரின் இசை வெளியிட்டு விழா பேச்சுக்கும் பல ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
ஆனால் இந்த முறை குறைந்த எண்ணிக்கையிலேயே கூட்டம் இருக்க வேண்டுமென முடிவெடுத்து உள்ளனர்.
இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.
இதன் பின்னணியில் சில காரணங்கள் சொல்லப்படுகிறது.
பிகில்’ படத்தின் இசை வெளியிட்டு விழா, ஒரு கல்லூரியில் நடந்த போது தள்ளுமுள்ளு நடந்தது.
ரசிகர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
அவர்களை தாக்கியதற்காக தளபதி விஜய் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
மேலும் சர்கார் & பிகில் இசை விழாக்களில் ஆளும் அதிமுக அரசை அதிகமாகவே தாக்கி வருகிறார் தளபதி விஜய்.
என்னுடைய போஸ்டர்களை கிழித்தாலும் பரவாயில்லை. என் ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம்.
யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கு உட்கார வைத்தால் சரியாக இருக்கும் என்றார்.
இந்த அரசியல் பேச்சு ஒரு பக்கம் இருக்க… மற்றொரு பக்கம் கொரோனா பீதியும் அதிகரித்துள்ளது.
‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவிற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்ட போது கொரோனாவினால் அதிக கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
பெரிய கூட்டத்தை திரட்டினால் அது பல சங்கடங்களை உருவாக்கும் என்பதாலும் மாஸ்டர் இசை விழாவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.











