மாஸ்டர்’ திரைப்படம் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு..?

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க வில்லனாக மக்கள் செல்வன் ஈவிஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கி‌‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், வரும் மார்ச் 15-ந் தேதி நடைபெறும் மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 65 படத்தையும் லோகேஷ் கனகராஜே இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே தான் மாஸ்டர் இசை விழாவில் அடுத்த பட அறிவிப்பு எனவும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், #VaathiComing என்ற 2 வது பாடல் இன்று மாலை 5மணிக்கு வெளி வந்துள்ளது.

இந்த பாடலில் விஜயை கொண்டாடும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இந்த பாடலில் விஜய் வெறலெவல் நடனத்தை திறமையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!