அரசியல் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இல்லை. – எம்.பி திருநாவுக்கரசர்.
கடந்த மார்ச் 5 ஆம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் விரைவில் ஆட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து ரஜினிகாந்தை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
நேற்று இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் ரஜினிகாந்தை சந்தித்தார்.
மக்கள் பணியாற்ற ரஜினிகாந்த் ஆர்வமாக இருக்கிறார் என்று கூறினார் செ.கு.தமிழரசன்.
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்தை காங்கிரஸ் எம்பி., திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் எம் பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
என் பேரனின் பிறந்தநாள் விழா சம்பந்தமாகப் பேச வந்தேன்.
அரசியல் குறித்து யாரிடமும் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் ரஜினிகாந்துக்கு இல்லை என்றார்.










