மாஸ்டர் தான் என் முதல் திரைப்படம்.. இசை வெளியீடு விழாவில் – நடிகர் சாந்தனு கொடுத்த ஷாக்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அருஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளது.

இதில் குட்டி கதை மற்றும் வாத்தி ரைடு பாடல்கள் எல்லா தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

வாத்தி கம்மிங் பாடல் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

இதில் தளபதி விஜய், அவரின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன், அம்மா ஷோபா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இவ்விழாவில் மேடையேறிய சாந்தனு பேசியதாவது…

நான் என்னை அறிமுகப்படுத்தி கொள்கிறேன். மாஸ்டர் தான் என் முதல் திரைப்படம்.

திரையுலகில் 10 வருடங்களை கடந்து விட்டாலும் வெற்றியை விட நிறைய அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்து விட்டேன்.

என உருக்கமாக தளபதி விஜய் ரசிகராக பேசினார் சாந்தனு.

error: Content is protected !!