‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யின் பெயர் இதுவா வைரலாகும் ஐ.டி.கார்டு
விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் நடித்துள்ள கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது.
இன்னும் ஒரு சில நாட்களில் இந்த திரைப்படம் சென்சாருக்கு செல்லும் என்றும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதை குறித்து தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது.
இந்நிலையில் படத்தில் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜான் துரைராஜ்’ என்று தெரியவந்துள்ளது.
இதுபோலவே இந்த மாஸ்டர் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் பயன்படுத்தும் ஐடி கார்டு புகைப்படம் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்துள்ளது.











