இயக்குனர் மிஷ்கின் திரைப்படத்தில் சிம்புவுக்கு என்ன கேரக்டர் தெரியுமா?
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார் நடிகர் சிம்பு. ஐதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தொடர்ந்து நடைபெற்றுவந்த நம் நாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனிடையில் இயக்குனர் மிஷ்கின் சொன்ன கதை பிடித்துப் போகவே நடிகர் சிம்பு உடனடியாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
பல வருடங்களாகவே இயக்குனர் மிஷ்கின் நடிகர் சிம்பு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இந்த முறை அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கூட்டணியில் மற்றும் ஒரு நடிகர் வைகைப்புயல் வடிவேலு இணைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு காவல்துறை அதிகாரியாகவும் வைகைப்புயல் வடிவேலு ஒரு சந்தேகத்திற்குரிய நபராக நடிப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு வைகைப்புயல் வடிவேலு காம்பினேஷன் காட்சிகள் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.











