கொரோனா பாரத பூமிக்காக இணைந்த இசைஞானி-எஸ்பி. பாலசுப்ரமணியம் துணை ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க நாடெங்கிலும் பொது முடக்கத்தை அறிவித்து மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.
இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர்.
கள வீரர்களை கௌரவிக்கும் விதமாக இளையராஜா பாரத பூமி என்ற பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடலை தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். மேலும் இந்தியில் சாந்தனு முகர்ஜி பாரத பூமி பாடலைப் பாடியுள்ளார்.
இளம் வயதில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள லிடியன் பியானோ, கீ போர்டு உள்ளிட்ட வாத்தியங்களை இளையராஜாவின் மேற்பார்வையில் இசைத்துள்ளார்.
இப்பாடல் இளையராஜாவின் யூடியூப் பக்கத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தும் விதத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது
இதற்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: “இந்த இனிமையான இசைத் தொகுப்பை வழங்கியதற்காக மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்.
சந்த இசையோடு இணைந்த இந்த காணொலியில் காட்சிப்படுத்தப் பட்டிருப்பது போல தொற்றை எதிர்க்கும் அதே நேரம் நாம் ஒன்று சேர்ந்து நமது வளமான பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காப்போம்.
இதுவரையில் கண்டிராத வகையிலான கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக முன் கள வீரர்களாக நின்று போராடுபவர்களுக்கும் ஒன்றின்றிணைந்து நிற்கும் இந்திய மக்களுக்கும் இந்திய திருநாட்டிற்கும் இசையால் பெருமை சேர்த்த பாரத பூமி என்ற தொகுப்பை கண்டு மகிழ்ந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இனிமையான இசைத் தொகுப்பை வழங்கியதற்காக மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள் #BharatBhoomi
— Vice President of India (@VPIndia) May 30, 2020
சந்த இசையோடு இணைந்த இந்த காணொலியில் காட்சிப்படுத்தப் பட்டிருப்பது போல தொற்றை எதிர்க்கும் அதே நேரம் நாம் ஒன்று சேர்ந்து நமது வளமான பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காப்போம்.
— Vice President of India (@VPIndia) May 30, 2020
இதுவரையில் கண்டிராத வகையிலான கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக முன் கள வீரர்களாக நின்று போராடுபவர்களுக்கும் ஒன்றின்றிணைந்து நிற்கும் இந்திய மக்களுக்கும் இந்திய திருநாட்டிற்கும் இசையால் பெருமை சேர்த்த பாரத பூமி என்ற தொகுப்பை கண்டு மகிழ்ந்தேன். #BharatBhoomi https://t.co/D7vuFTAJbT
— Vice President of India (@VPIndia) May 30, 2020











