கொரோனா சரியான பின்னரும் டிஸ்சார்ஜ் செய்யாமல் விஜயா மருத்துவமனை சிக்கிய தமிழன் திரைப்படத்தின் இயக்குனர் மஜீத்.
இளைய தளபதி விஜய் நடிகை பிரியங்கா சோப்ரா, நாசர், ரேவதி, விவேக் நடித்த தமிழன் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் மஜீத்.
மேலும் பைசா என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
இயக்குநர் மஜீத் சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக பாசிட்டிவ் என்று வடபழனியிலிருக்கும் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது மனைவி சற்று விவரமானவர் முழுமையான கொரோனா வைரஸ் நோய் தொற்று டிரீட்மெண்ட்டுக்கு மொத்தம் எவ்வளவு ஆகும் என்று இயக்குனர் மஜீத் தின் மனைவி கேட்டுள்ளார்.
அதற்கு விஜயா மருத்துவமனையின் மேனேஜ்மெண்ட் சோர்ந்த ஆட்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்னது 2,80,000/- ரூபாய் ஆகும் என்று. கையிருப்பைக் கணக்குப் பார்த்து ஓகே என்று அங்கேயே விஜயா மருத்துவமனையலை சேர்ந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் நோய் தொற்று அவரைவிட்டு ஓடிவிட்டது.
நிம்மதிப் பெருமூச்சு விட்டு, பணத்தை செட்டில் செய்யக் கேட்டபோது ஒருநாள் காத்திருக்கச் சொல்லி (கணக்குப் பார்ப்பதற்காக) அவர்கள் சொன்ன தொகை 3,40,000/- ரூபாய். அவரது மனைவி நிறையக் கேள்விகள் கேட்கவும் அடுத்து அவர்கள் சொன்ன தொகை 4 லட்ச ரூபாய்.
மஜீதும் வேறு வழியில்லாமல் சில நிர்வாகிகளிடம் விபரம் சொல்ல, அம்மா கிரியேசன்ஸ் டி. சிவா அவர்கள் 80,000/- ரூபாய் ஏற்பாடு செய்து நேரடியாக விஜயா ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பி விட்டார்.
பிரச்சனை முடியவில்லை. இப்போது இறுதியாக அவர்கள் கேட்கும் தொகை 4,65,000/- ரூபாய்.
என்ன செய்வதென்று தெரியாமல், தெரு பிளாட்பாரத்தைவிட மோசமான சூழலில் காத்திருக்கும் இயக்குநர் மஜீத், விஜயா மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நிர்வாகத்திடம் பேசியோ, பணத்தைக் கொடுத்தோ அவரை மீட்க வேண்டும்.
ஹோட்டலாக இருந்தால் பாத்திரம் கழுவச் சொல்வார்கள். குவாரியாக இருந்தால் கல் உடைக்கச் சொல்வார்கள்.
இது மருத்துவமனை. என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
தனியார் மருத்துவமனையை விட கொரோனாவே பரவாயில்லை போல!
கொரோனா என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைககு இதில் விஜயா மருத்துவமனையும் செல்ல வேண்டாம்.
மக்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று வந்தால் அரசு மருத்துவமனை செல்லுங்கள்.











