பெண்களின் சாம்ராஜ்யம்… பகைமையின் உச்சம்! கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் ‘அக்கா’ டீசர் வெளியீடு; அக்டோபர் 30 முதல் நெட்ஃபிளிக்ஸில்!

பெண்களின் சாம்ராஜ்யம்… பகைமையின் உச்சம்! கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் ‘அக்கா’ டீசர் வெளியீடு; அக்டோபர் 30 முதல் நெட்ஃபிளிக்ஸில்!

சென்னை 17 அக்டோபர் 2026 நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’ இணையத்தொடர் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது. நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் அறிமுகமாகின்றனர். பெர்னூரு பாரம்பரியமும் அதைவிட அதிகமாக பகையும் கொண்ட இடம். இங்கு ஆட்சி செய்யும் பெண்கள் யாருக்கும் அடிபணிவதில்லை. மாறிவரும் அதிகாரப் போட்டிகள் மற்றும் கொழுந்துவிட்டெரியும் பகைமைகளால் உருவான பெர்னூரு ராஜ்ஜியத்தின் மையமே இந்த இரண்டு பெண்கள்தான்.

யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, பெண்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதை. இத்தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி. 1980-களின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் கட்டமைக்கப்பட்டு, ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘அக்கா’ தொடரின் டீசர் வெளியானது மற்றும் தொடரின் அனுபவம் குறித்து கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய பிறந்தநாளன்று ‘அக்கா’ டீசர் வெளியிட்டிருப்பது ரொம்பவே ஸ்பெஷல். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மறக்க முடியாதது பவானிதான். ராதிகாவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடைய கதாபாத்திரங்கள் கதைக்கு சுவாரஸ்யமான பல பரிமாணங்களை தரும். நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் தொடர் ‘அக்கா’. இந்தக் கதையின் தனித்துவமும், அதன் உலகமும்தான் என்னை ஈர்த்தது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் இது பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்து கொண்டதாவது, “‘அக்கா’ தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பும் டீசர் வெளியீடும் கீர்த்தியின் பிறந்தநாளன்று வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி. நான் நடித்திருக்கும் ருத்ரா கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவள் தனது கொள்கைகளால் வழிநடத்தப்படுபவள். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தையே கேள்விக்குள்ளாக்கும் இயல்பும் அவளுக்கு உண்டு. கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மையும், அவர்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களால் உருவாகும் பதற்றங்களும்தான் என்னை இந்தத் தொடரில் நடிக்க சம்மதிக்க வைத்தது. கடந்த பல ஆண்டுகளாக நெட்ஃபிளிக்ஸூடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இதில் ‘அக்கா’ மறக்க முடியாத தொடர். சுவாரஸ்யமான இந்தக் கதையை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பார்வையாளர்களின் விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

*நெட்ஃபிளிக்ஸ் குறித்து:*

நெட்ஃபிளிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் நேரலை நிகழ்ச்சிகளை இந்நிறுவனம் வழங்குகிறது. சந்தாதாரர்கள் தங்களுக்குப் பிடித்த உள்ளடக்கங்களை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். விரும்பிய நேரத்தில் நிறுத்தி வைக்கவும், மீண்டும் தொடர்ந்து பார்க்கவும் முடியும். மேலும், தங்களது சந்தா திட்டங்களையும் எந்த நேரத்திலும் மாற்றிக்கொள்ளலாம்.

*யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் குறித்து:*

மறைந்த யஷ் சோப்ராவால் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யஷ் ராஜ் ஃபிலிம்ஸ், இந்தியாவின் முன்னணி தனியார் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும், நாட்டின் மதிப்புமிக்க பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகப் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்துவது, திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றுவது, இந்தியத் திரைப்படங்களின் உலகளாவிய வரவேற்பை விரிவுபடுத்துவது எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

முழுமையான பொழுதுபோக்கு நிறுவனமாகச் செயல்படும் YRF, திரைப்படத் தயாரிப்பு, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச விநியோகம், இசை, டிஜிட்டல் உள்ளடக்கம், சந்தைப்படுத்துதல், டேலண்ட் மேனேஜ்மெண்ட், உரிமம் வழங்குதல், வணிகப் பொருட்கள், பிராண்ட் கூட்டாண்மைகள் மற்றும் ஸ்டுடியோ செயல்பாடுகள் எனத் திரைப்படம் மற்றும் உள்ளடக்க உருவாக்கத்தின் அனைத்துத் துறைகளிலும் செயல்படுகிறது.

இந்தியாவின் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட முன்னணி திரைப்படத் தயாரிப்பு மையங்களில் ஒன்றைத் தனது வசம் கொண்டுள்ள YRF, படைப்பாற்றல் சிறப்பையும் தொழில்துறைப் புதுமைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து, இந்தியப் பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!