சிறப்பான நடிப்பின் மூலம் அசத்தும் நடிகர் அர்ஜுன் தாஸ் !!

சிறப்பான நடிப்பின் மூலம் அசத்தும் நடிகர் அர்ஜுன் தாஸ் !!

சென்னை 13 செப்டம்பர் 2025 நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரைப்பட உலகில் 2012 ஆம் ஆண்டு பெருமான் என்கிற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

அதன் பின்னர் 2019-ஆம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “கைதி” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைப்பட உலகில் நடிகராக பாராட்ட பெற்றார்.

இந்த கைதி திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிரபலமானதை தொடர்ந்து இவர் தமிழ் திரைப்பட உலகில் புகழ் உச்சிக்கு சென்றார்.

அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த”மாஸ்டர்”  கமல் நடிப்பில் வெளிவந்த “விக்ரம்” மற்றும் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த “குட் பேட் அக்லி”  போன்ற திரைப்படங்களில் தனது தனித்துவமான குரல் மற்றும் மிரட்டலான வில்லன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அர்ஜுன் தாஸ், தற்போது ‘அநீதி’, ‘ரசவாதி’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்துள்ளார்.

‘பாம்’ திரைப்படம் மூலம், ஒரு முழு கதாநாயகனாக தனது நடிப்பு பரிமாணத்தை அர்ஜுன் தாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை நடித்த திரைப்படங்களில் கேங்ஸ்டர் அல்லது நகர இளைஞன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் அர்ஜுன் தாஸ் , இந்த பாம் திரைப்படத்தில் எந்தவித கதாநாயகனுக்கான எந்த அம்சமும் இல்லாமல், ஒரு கிராமத்து இளைஞனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருடைய ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக பாம் அமைந்துள்ள நிலையில் அவரது முந்தைய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, அப்பாவித்தனமான, நல்ல மனது படைத்த கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் அசத்தியுள்ளார்.

‘பாம்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸின் நடிப்பு, இதுவரை அவர் நடித்த திரைப்படங்களிலேயே சிறந்ததாகக் கருதப்படும் அளவிற்கு பல காட்சிகளில் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்த பாம் திரைப்படம் நடிகர் அர்ஜுன் தாஸ் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!