“பாம்” திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், ஷிவாத்மிகா, நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டி.எஸ்.கே, கிச்சா ரவி, பூவையார், சில்வென்ஸ்டன், (எப்புத்ரா) ரோஹன், காவ்யா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விஷால் வெங்கட்.

ஒளிப்பதிவாளர் :- பி.எம். ராஜ்குமார்.

படத்தொகுப்பாளர் :- பிரசன்னா ஜி.கே.

இசையமைப்பாளர் :- டி இமான்.

தயாரிப்பு நிறுவனம் :- ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- சுதா சுகுமார் – சுகுமார் பாலகிருஷ்ணன்.

ரேட்டிங் :- 3.75./5.

மிகப்பெரிய மலை அடிவாரத்தில் காளகம்மாய்பட்டி என்ற கிராமத்தில், உள்ள அனைத்து மக்களும் சாதி  மதம் என்ற வேற்றுமை எதுவும் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

வருடம் தோறும் குறிப்பிட்ட நாளில் மலையின் உச்சியில் ஜோதி என்ற ஒளி தெரிந்து, மயிலும் கட்டுவதும் தெரிவதால்  அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்துவிட்டதாக எண்ணி அந்த கிராமமே  திருவிழாவை உருவாக்கி  வருடம் தோறும் அந்த கிராம மக்கள் கொண்டாடுகிறார்கள்

இந்நிலையில், அந்த கிராமத்தில் மாபெரும் வெள்ளம் வர அப்போது, அருகிலிருக்கும் மலை மீது இருந்து ஒரு மிகப்பெரிய பாறை ஒன்று விழுகிறது.

அந்த பாறை விழுந்ததால் இந்த வருடம் ஜோதியும் இல்லாமல், மயிலும் காட்சியளிக்காததால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் கீழ் ஜாதி மேல் ஜாதி என்ற இரண்டு ஜாதிகளாக பிரிந்து கலவரம் ஏற்படுகிறது.

இந்தக் கலவரத்துக்கு பின் மலையில் இருந்து விழுந்த பாறை இரண்டாக பிளந்து விழு அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து அந்த இரண்டு பாறைகளையும் கடவுளாக வணங்க தொடங்குகிறார்கள்.

காளகம்மாய்பட்டியான அந்த கிராமம் தற்போது காளப்பட்டியாகவும் கம்மாய்பட்டியாகவும் இரண்டு கிராமமாக பிரிந்து மக்கள்  வாழ்ந்து வருகிறார்கள் .

சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட இரண்டு சாதிகளுக்கு இடையே தொடர்ச்சியாக மோதல் வருடம் தோறும் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது.

மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தலையீட்டும் இந்த கீழ் சாதி மேல் சாதி இரண்டு சாதியினருக்கிடையே  இருக்கும் மோதலை தடுக்க முடியாமல் அந்த இரண்டு கிராமமும் போராட்ட களமாகவே இருக்கிறது.

இதனால், அரசாங்கத்தால் அந்த கிராமத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து விதமான திட்டங்களும் சலுகைகளும் கிடைக்காமல் போய்விடுகிறது.

அந்த கிராமத்தில் இருக்கும் காளி வெங்கட், இரண்டு சாதியினரையும் எப்படியாவது ஒன்று சேர்க்க பல வழிகளில் முயற்சி செய்ய எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

காளி வெங்கட் தங்கையான கதாநாயகி ஷிவாத்மிகா வருகிறார்.

காளி வெங்கட்டின்  நண்பனாக இருக்கும் கதாநாயகன் அர்ஜூன் தாஸ் இந்த கிராமத்தை விட்டு, தனது நண்பன் காளி வெங்கட் மற்றும் அவருடைய தங்கை கதாநாயகி ஷிவாத்மிகா வெளியூர் சென்று தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆசைப்படுபவர்.

எப்படி இருந்தாலும் என்ன நடந்தாலும், தனது கிராமத்தை விட்டு காளி வெங்கட் வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்க கதாநாயகன் அர்ஜூன் தாஸ் மீது கதாநாயகி ஷிவாத்மிகாவிற்கு காதல் மலர்கிறது.

திடீரென காளி வெங்கட் ஒரு நாள் இறந்து விட, அந்த கிராமமே அதிர்ச்சியில் உறைந்து விடுகிறது.

காளி வெங்கட்டுக்கு இறுதி சடங்கு செய்ய அந்த கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் அவரை தூக்க முயற்சி செய்ய ஆனால் அவர்களால் காளி வெங்கடை தூக்க முடியவில்லை.

தனது நண்பன் காலி வெங்கட் இறந்து இருந்தாலும், அவருடைய உடலிலிருந்து குசு மட்டும் அவ்வப்போது வந்து கொண்டிருக்க, தனது நண்பன் காளி வெங்கட் இறக்கவில்லை இன்னும் உயிருடன் தான் இருக்கிறான் என கதாநாயகன் அர்ஜுன் தாஸ் நம்புகிறார்.

இரண்டு கிராமத்திற்கு நடுவே இருக்கும் பஞ்சாயத்து மேடையான ஆலமரத்தடியில் காளி வெங்கட்டை கதாநாயகன் அர்ஜுன் தாஸ் தூக்கிச் சென்று சேரில் உட்கார வைக்கிறார்.

இறந்து போன காலி வெங்கட் அடிக்கடி குசு விடும்போது, முழு உடலும் ஆட்டம் ஆடுவதால், அந்த கிராமத்தில் உள்ள பூசாரி நம்ம ஊருக்கு சாமி வந்திருக்கிறது என குறி சொல்கிறார்.

இந்த நிலையில் அந்த இரண்டு கிராமமும் இணைந்து இறந்து போன காளி வெங்கட்டை கடவுளாக்கி அந்த இரண்டு கிராமமும் வழிப்பட தொடங்குகிறது.

கதாநாயகன் அர்ஜுன் தாஸ் கூறியது போல் காலி வெங்கட் உயிருடன் இருக்கிறாரா? உயிருடன் இல்லையா?

அந்த இரண்டு கிராமமும் இறந்த காலி வங்கத்தை கடவுளாக வணங்குவதற்கு என்ன காரணம்? என்பதுதான் இந்த “பாம்” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “பாம்” திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ், இப்படிப்பட்ட கதாபத்திரத்தை ஏற்று நடித்ததற்கு முதலில் அவரைப் பாராட்டியாக வேண்டும்.

இந்த “பாம்” திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ்க்கு கதையில் பெரிய அளவில் முக்கியத்துவம் என்பது இல்லை என்று தெரிந்தும், கதைக்கான  முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு இந்த பாம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தின் கதாநாயகன் அர்ஜுன் தாஸ் வரும் காட்சிகளில் எவ்விதமான கதாநாயகனுக்கு  தேவையான ஆக்சன் பாடல் காட்சிகள் இல்லாமல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் நடிப்பின் மூலம் கொடுத்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வலு சேர்த்துள்ளார்

இந்த “பாம்” திரைப்படத்தில் கதாநாயகியாக ஷிவாத்மிகா, நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷிவாத்மிகா தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபத்திரத்தை அளவான நடிப்பை கொடுத்து  காட்சிகளில் அனைத்தையும் தேவதையாக வந்து அழகுப்படுத்தி இருக்கிறார்.

இந்தக் கதையில் முதன்மை கதாபத்திரமாக வரும் காலி வெங்கட் சில காட்சிகளில் தனக்கான நடிப்பை கொடுக்கும் தருணம் இருந்த போதிலும், அதை சூப்பராக செய்து முடித்து, அதன் பிறகு பிணமாக நடித்து பொறுமையான நடிப்பை மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

இந்த “பாம்” திரைப்படத்தில் ராட்சசன் சரவணன் நடிப்பு கதையின் ஓட்டத்திற்கு பலம் என்றே கூறலாம்.

இந்த “பாம்” திரைப்படத்தில் நடித்த மற்ற அனைத்து நடிகர்களும், சிங்கம்புலி, கிச்சா ரவி, அபிராமி, பால சரவணன், நாசர், உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து திரைக்கதை ஓட்டத்திற்கு நடிப்பின் மூலம் பயணித்திருக்கிறார்கள்.

சாதி வெறியால் இரண்டு கிராமமும் பிளவு பட்டு கிடக்கும் கிராம மக்களை ஒன்றிணைக்க  ஒரு போராளியின் மரணம் தான் கதை என்று கூறுவதை விட, அந்தப் போராளியின் குசு எப்படி பிளவுபட்ட இந்த கிராமத்தை எப்படி ஒன்று சேர்க்கிறார் என்ற கதையை மிகச் சிறப்பாக திரைக்கதை அமைப்பு குசுவை குலதெய்வமாக்கி மிகச் சிறப்பான இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.

மொத்தத்தில், இந்த “பாம்”  மூட நம்பிக்கைகளையும் சாதியையும் மதத்தையும் வைத்து பிழைப்பு நடத்தும் இனப் பிறவிகளுக்கு இந்த திரைப்படம் ஒரு சம்மட்டி அடிதான்.

error: Content is protected !!