மார்கழி திங்கள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார்.!!

மார்கழி திங்கள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார்.!!

சென்னை 03 ஏப்ரல் 2023 இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் சார்பில் இந்த மார்கழி திங்கள் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

மார்கழி திங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுடைய மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தில் மிக மிக  முக்கியமான ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள் நடிக்க உள்ளார.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களுடைய மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இந்த திரைப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி இயக்குநர் சுசீந்திரன்.

இந்த இந்த மார்கழி திங்கள் திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் இளைய இயக்குனர் இமயம் மனோஜ் பாரதிராஜா முதல் திரைப்படத்திலேயே தனது தந்தையை கதையின் நாயகனாக வைத்து இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. .

இந்த ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் இன்று ஏப்ரல் 3ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியிட்டுள்ளார்.