சூப்பர் ஸ்டாரின்  “ஜெயிலர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.!!!

சென்னை 22 ஆகஸ்ட் 2022 சூப்பர் ஸ்டாரின்  “ஜெயிலர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.!!!

தமிழ் திரைப்பட உலகில் முடி சூடா மன்னன் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் இறுதியாக வெளியாகியது.

அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கையாகவும் குஷ்பு மற்றும் மீனா இருவரும் முறை பெண்களாகவும் நடித்திருந்தனர்.

இந்த அண்ணாத்த திரைப்படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த இந்த அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 169வது திரைப்படம் நடிக்க இருக்கிறார்.

இந்த 169வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரிக்கின்றார்.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.