நடிகர் துருவ் விக்ரம் அதிரடி மாஸ் அவதாரம்… ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் துருவ் விக்ரம் அதிரடி மாஸ் அவதாரம்… ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சென்னை 15 செப்டம்பர் 2026 மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்.

படத்தின் தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதிய போஸ்டரில் பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றுகிறார். அவரது தீவிரமான பார்வையும் ஆக்ரோஷமான உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக முன்னோக்கி நீட்டியிருக்கும் அவரது கை, போஸ்டருக்கு அதிரடியான தோற்றத்தை கொடுக்கிறது. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும் படத்தின் ஆக்‌ஷன் பின்னணியை உணர்த்துகிறது.

ஃபர்ஸ்ட் லுக் ‘ஜாக்கி’ திரைப்படம் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதையும், துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறது.

இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் – இசை, விக்கி – ஒளிப்பதிவு, ஜெயசூர்யா எஸ் – படத்தொகுப்பு, ஜி.எம். சேகர் –தயாரிப்பு வடிவமைப்பாளர், விக்ரம் மோர் – சண்டைப்பயிற்சி என சிறப்பான தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கின்றனர். மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் கவனிக்கிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!