பழம்பெரும் நடிகை, சௌகார்ஜானகி மறைவுக்கு, நடிகர் இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல்!
பழம்பெரும் நடிகை, சௌகார்ஜானகி மறைவுக்கு, நடிகர் இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல்!
சென்னை 21 ஆகஸ்ட் 2026 பழம்பெரும் நடிகை, பண்பட்ட நடிகை, பட்டை தீட்டப்பட்ட வைரமாய் ஜொலித்த நடிகை, பத்மஸ்ரீ பட்டம் பெற்ற நடிகை, தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நானூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாயகி, குணச்சித்திர நாயகி, திரைச்சித்திர நாயகி சௌகார் ஜானகி அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி, கலை உலகத்திற்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடக்கூடிய கலை உலகத்திற்கும், தென்னிந்திய ரசிகப் பெருமக்களுக்கும், அவருடைய இல்லத்தாருக்கும், என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்….
இப்படிக்கு, திரைப்பட இயக்குனர் நடிகர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர்











