‘இருமுடி கட்டு’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நட்சத்திரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசலா லட்சுமண்,  ராஜ்குமார் கசிரெட்டி, ரமணா பார்கவ், கிஷோர் காஞ்சேரபாளையம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிவா நிர்வாணா.

ஒளிப்பதிவாளர் :- விஷ்ணு சர்மா.

படத்தொகுப்பாளர் :- பிரவின் புடி.

இசையமைப்பாளர் :- . ஜி.வி. பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- நவீன் யெர்னேனி & ஒய். ரவி சங்கர்.

மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா D ONE.

ரேட்டிங் :-  3.5/5.

கதாநாயகன் ரவிதேஜா,  மனைவி பிரியா பவானி சங்கர்  எட்டு வயது மகள் பேபி நட்சத்திரா இவர்களுடன் வாழ்ந்து வருகிறார்.

திருமணம் நடந்து பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவமிருந்து பிறந்த பெண் குழந்தை என்பதால், மகள் மீது கதாநாயகன் ரவிதேஜா, அளவுக்கு அதிகமான பாசம் கொண்ட  இருக்கிறார்.

தனது வாழ்க்கை முறையில் முரட்டுத்தனமும் அதிகளவில் குடிப்பழக்கமும் கொண்டவராக இருந்தாலும், ஒரு கட்டத்தில் மகளின் வேண்டுகோளுக்காக ஆண்டுதோறும் ஐயப்பன் கோவில் செல்வதற்காக 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில், அந்த கிராமத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சில பள்ளிக் குழந்தைகள் அதை வெளியே சொல்லத் தயங்கிய போது, துணிச்சலாக வளர்ந்த பேபி நட்சத்திரா  இவ்விவரங்களைத் தன் தந்தையிடம் தைரியமாகக் கூறுகிறாள்.

அதைத் தொடர்ந்து, அந்தப் பாலியல் குற்றவாளிகளை நோக்கித் கதாநாயகன் ரவிதேஜா வேட்டையாடினாரா? வேட்டையாடவில்லையா? என்பதுதான் இந்த ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் ரவிதேஜா  கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரவிதேஜா திரிநாத் கதாபாத்திரத்தில்  வழக்கமான முற்றிலும் மாறுபட்ட வகையில், தனது மகள் மீது பாசம் கொண்ட தந்தையாக அவர் நடித்திருப்பது திரைப்படத்தின் மிகப்பெரிய பலம்.

குறிப்பாக மகளுடன் வரும் காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கிறது.

கதாநாயகன் ரவிதேஜா மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பேபி நக்ஷத்திரா திரைப்படத்திற்கு  மிகப்பெரிய அளவில் தனது நடிப்பால் பல இடங்களில் கவனம் ஈர்க்கிறார்.

இந்த ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கரின் நடிப்பு, வெறும் கதாநாயகியாக அல்லாமல் குடும்ப உணர்வுகளை தாங்கி நிற்கும் மனைவி மற்றும் தாயின் இயல்பான நடிப்பின் மூலம் திரைப்படத்திற்க்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

சாய் குமார், அஜய்அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசலா லட்சுமண்,  ராஜ்குமார் கசிரெட்டி, ரமணா பார்கவ், கிஷோர் காஞ்சேரபாளையம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ், நடித்திருக்கும் அனைத்து  கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு மூலம் அனைத்துக் கட்சிகளையும்  மிகச் சிறப்பாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் திரைபபடத்தின் பக்தி மற்றும் பின்னணி இசை உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

குறிப்பாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘இருமுடி கட்டு’ பாடல் ஐயப்ப பக்தி மற்றும் ஆன்மிகப் பயணத்தை மிகச் சிறப்பாக முன்னிறுத்துகிறது.

தந்தை மகள் மீதான பாசம், அந்தப் பாசத்தால் ஏற்படும் மனமாற்றம், ஐயப்ப பக்தி மற்றும் குடும்பத்தை காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் போராட்டம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வாணா.

மொத்தத்தில் இந்த இருமுடி கட்டு கட்டு திரைப்படம் தந்தை மகன் பாசத்தை கூறும் அருமையான திரைப்படம்.

error: Content is protected !!