நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா உதயகுமார் இன்று காலை திருமணம் நடந்து முடிந்தது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து !!

சென்னை 28 அக்டோபர் 2022 நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா உதயகுமார் இன்று காலை திருமணம் நடந்து முடிந்தது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து !!

சிந்து சமவெளி திரைப்படத்தில் மூலம் தமிழ் திரைப்பட உலகில் நடிகராக அறிமுகமானார்.

இந்த சிந்து சமவெளி திரைப்படத்தில் நடிகை அமலா பாலுக்கு ஜோடியாக நடித்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் என நேற்று அணைத்து  பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து இதனை தெரிவித்திருந்தார்.

தன்னுடைய திருமணம் தனது குடும்பத்தினரால் ஏற்பாடு செயப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண், சென்னையில் இன்று நர்மதா உதயகுமாரை மணந்தார்.

நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கும் என்று முன்பே செய்திகள் வெளியானது.

இதையடுத்து, அவரது நிச்சயதார்த்தம் இந்த மாத தொடக்கத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆயுத பூஜை தினத்தின் அன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது மனைவி நர்மதா உதயகுமாரை சமூக வலைதளத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா உதயகுமார் இன்று காலை திருமணம் நடந்தது.

இவர்களுடைய திருமணம் மிக விமரிசையாக நடந்து முடிந்தது.

திருமணத்தில் இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் – நர்மதா தம்பதிக்கு திரை உலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இணையத்தில் அவர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.