இசையமைப்பாளர் இமானின் 2வது திருமணம் இன்று நடைபெற்றது.
சென்னை 15 மே 2022 இசையமைப்பாளர் இமானின் 2வது திருமணம் இன்று நடைபெற்றது.
தளபதி நடிகர் விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான்.
இதுவரை 100 மேற்பட்ட திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து இருக்கிறார் டி இமான்.
டி இமான், மோனிகா ரிச்சர்ட்ஸ் என்பவரை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டதாக 2021 இறுதியில் அறிவித்தார் டி.இமான்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் டி இமான் விரைவில் மறுமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் திருமணம் செய்துகொண்டார்.
அதன்படி இன்று 2022 மே 15ல் இமான் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான கலை இயக்குனர் உபால்டு என்பவரின் மகள் அமலியை திருமணம் செய்துக் கொண்டார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
இரு வீட்டாரது சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நடிகை குட்டி பத்மினி, பாடகர் க்ரிஷ் மற்றும் அவரது மனைவி நடிகை சங்கீதா கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
டி இமான் – அமலி திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.











