தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இணைந்தார் நடிகர் லெஜெண்ட் சரவணன்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இணைந்தார் நடிகர் லெஜெண்ட் சரவணன்!
சென்னை 12 செப்டம்பர் 2026 தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், சங்க நிர்வாகிகள், இயக்குநர் செல்வபாரதி மற்றும் இயக்குநர் KBB நவீன் ஆகியோர், லெஜெண்ட் சரவணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, திரைப்பட எழுத்தாளர்கள் மற்றும் திரைத்துறையினரின் நலன், படைப்பாளிகளுக்கு வழங்க வேண்டிய அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, லெஜெண்ட் சரவணன் அவர்கள் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இணைந்தார்.
திரைப்படத் துறையில் எழுத்தாளர்களின் பங்களிப்பும், அவர்களின் படைப்பாற்றலின் முக்கியத்துவமும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், லெஜெண்ட் சரவணன் அவர்கள் கௌரவ உறுப்பினராக இணைந்திருப்பது சங்கத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கத்தின் தலைவர் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சங்க நிர்வாகிகள் சார்பில் லெஜெண்ட் சரவணனுக்கு வாழ்த்துகளும், நன்றியும் தெரிவிக்கப்பட்டன.











