அனபு தம்பி சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் மறைவிற்கு ‘ நடிகர் செந்தில் இரங்கல்.

சென்னை 17 ஏப்ரல் 2021

அனபு தம்பி சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் மறைவிற்கு ‘ நடிகர் செந்தில் இரங்கல்.

அன்பு தம்பி சின்னக் கலைவாணர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

நானும் அவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம்.

சிறந்த கலைஞர். மிகவும் அன்பானவர்.

எண்ணற்ற மரங்களை நட்ட அவர், இயற்கை இருக்கும் வரை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

சினிமா இருக்கும் வரை அனைவரின் நினைவிலும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

error: Content is protected !!