ட்விட்டர் பக்கமே வர முடியல சூர்யா 40 பற்றி அப்டேட் கேட்டுட்டே இருக்காங்க சூர்யாவின் ரசிகர்களுக்கு பயப்படும் இயக்குநர் பாண்டிராஜ்

சென்னை 27 மே 2021

ட்விட்டர் பக்கமே வர முடியல சூர்யா 40 பற்றி அப்டேட் கேட்டுட்டே இருக்காங்க சூர்யாவின் ரசிகர்களுக்கு பயப்படும் இயக்குநர் பாண்டிராஜ்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தற்காலிகமாக ‘சூர்யா 40’ என்றே சூர்யாவின் ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா துரை, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இமான் இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு TWITTER SPACEல் கலந்துக் கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

அப்போதும் நடிகர் சூர்யா ரசிகர்கள் அவரிடம் ‘சூர்யா 40′ அப்டேட் குறித்து கேட்டுக் கொண்டே இருந்தனர்.

திரைப்படத்தை பற்றி எதுவும் சொல்லக்கூடாது.

திரைப்படத்தின் தலைப்பு முதல் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.

நடிகர் சூர்யா சார் ரசிகர்கள் அப்டேட் கேட்டுட்டே இருக்காங்க..

ட்விட்டர் பக்கமே வர முடியல..” என தெரிவித்தார் பாண்டிராஜ்.