படப்பிடிப்பு தளத்திற்கு கை துப்பாக்கியுடன் வந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின்.!!
சென்னை 28 ஆகஸ்ட் 2022 படப்பிடிப்பு தளத்திற்கு கை துப்பாக்கியுடன் வந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின்.!!
நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீப காலங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த மாமன்னன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு அவருடன் நடித்து வருகின்றனர்
நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் ஓகே ஓகே, நண்பேண்டா உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.
இந்த திரைப்படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன.
தொடர்ந்து தன்னுடைய பாதையை அழுத்தமான கதைக்களங்களுக்கு மாற்றிக் கொண்டார்.
அடுத்தடுத்து தன்னுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக எடுத்துக்காட்டும் வகையில் தற்போது தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த திரைப்படங்களில் இவருக்கு நடிக்கும் முக்கியத்துவம் அதிகமாக காணப்படுகிறது.
சமீபத்தில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இவரது நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு காமெடி கலாட்டா செய்ய இணைந்துள்ளார்.
அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து நடிப்புக்கு முழுக்குப் போடவுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் படவிழா ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சிறப்பான கதைக்களங்கள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
மீண்டும் இயக்குனர் அருண்ராஜா காமராஜுடன் இணையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் முன்பக்கம் பார்த்தபடி படப்பிடிப்பிற்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது கையில் துப்பாக்கியுடன் திரைப்படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், அவரது கழுத்தில் துப்பாக்கியை வைத்து வில்லத்தனமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் சாதாரண உடையில் இயல்பாக காணப்படுகிறார்.











